https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்! இடம் : சென்னை

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்! 

இடம் : சென்னை


கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்! இடம் : சென்னை வரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி . முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி!! முன்பதிவு செய்ய அழைக்கலாம்: 044 4863 7811/ 2432 7811, 81444 47811

பள்ளிகளில் பாதுகாப்பு முதல்வர் உத்தரவு

"பள்ளிகளில் பாதுகாப்பு"
--முதல்வர் உத்தரவு

அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துார் தாலுகா, பெரிய கொளுத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர், மோகன்; இவரது மகன், கீர்த்தீஸ்வரன். அப்பகுதியில் உள்ள பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தான்.நேற்று முன்தினம், பள்ளி கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த, கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான்.இதை அறிந்த முதல்வர், இனி வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கும்படிஉத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்படவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கல்லுாரி கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மாணவன் கீர்த்தீஸ்வரன் இறந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

Soon, Computer Science to be allied with science ... news:Indian Express.

Soon, CS 

to be allied with science .
.. news:Indian Express.

இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு : 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு :
 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2வுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 4 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, ஏப்., 13 வரையிலும் தேர்வுகள் நடக்கின்றன. இத்தேர்வுகளில், நாடு முழுவதும், 11 ஆயிரத்து, 574 பள்ளிகளைச் சேர்ந்த, 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர். 10ம் வகுப்புக்கு, 1,564; பிளஸ் 2வுக்கு, 1,252 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பில், 6.71 லட்சம் மாணவியர் உட்பட, 16.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், ஐந்து மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 4.95 லட்சம் மாணவியர் உட்பட, 11.86 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மண்டலத்தில், 71 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், 15 ஆயிரத்து, 700 பேர், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

பேராசிரியர் பணிக்கான தேர்வு : 41 ஆயிரம் பேர் பங்கேற்பு

பேராசிரியர் பணிக்கான தேர்வு :
41 ஆயிரம் பேர் பங்கேற்பு
சென்னை: பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் தேசிய தகுதி தேர்வான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில், தெரசா மகளிர் பல்கலை சார்பில், நேற்று மாநில அளவிலான, செட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 44 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.நேற்றைய தேர்வுக்கு, சென்னையில், 11 உட்பட, தமிழகம் முழுவதும், 54 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும், 41 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.'விரைவில், வினாத்தாளுக்கான தோராய விடைக்குறிப்பு வெளியிடப்படும். 'அதில், தேர்வர்களின் கருத்து கேட்கப்பட்டு, விடை குறிப்புகள் இறுதி செய்யப்படும். பின், விடைத்தாள் திருத்தம் துவங்கும்' என, பல்கலை பதிவாளரும், தேர்வு குழு உறுப்பினர் செயலருமான, பேராசிரியை, சுகந்தி தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - கல்வித்துறை திட்டம்

10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநிரவல்
 - கல்வித்துறை திட்டம்

(28 இடைநிலை ஆசிரியர்கள் வழக்கு தொடுத்து அரசாணையை பெற்றுள்ளனர்

28 இடைநிலை ஆசிரியர்கள்  வழக்கு தொடுத்து  அரசானையை பெற்றுள்ளனர்