trail
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .
கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா 10-3-18 அன்று நடைப்பெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.
பேர்ணாம்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜார்ஜ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர் மற்றும் சமூக சேவையாளர் பாஸ்கரன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்கள் ஆசிரிய பயிற்றுனர் நாகராஜ், வனக்குழு
தலைவர் லோகநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோவிந்தன், ஊராட்சி மன்ற
செயலாளர் லதா, நாட்டாண்மை பிரபாகரன், நாட்றம்பள்ளி ஆசிரியர் அருண்,
காவேரிபாக்கம் தலைமை ஆசிரியர் லதா, கிரீன்வேல்யு பள்ளி தாளாளர் ஆயிஷாபேகம்,
ZTV தயாரிப்பாளர் பாலமுருகன், PR.சுப்பிரமணி News 7 & media
செய்தியாளர் முகம்மத் பிலால் தினகரன் செய்தியாளர் ஹேம் பிரசாத் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
இப்பள்ளி ஆங்கில வழி பள்ளியாக இரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து வருகிறது.
இப்பள்ளியில் Projetor வழியாக மெட்ரிக்,CBSE பள்ளிகள் போல் பாடங்கள் கற்று கொடுக்கப்படுகிறது.
அதே போல் யோகா, கம்யூட்டர் கல்வி, நூலக வசதி, தொலைக்காட்சி வழி கல்வி,
தரமான மதிய உணவு வைபை மூலம் இதர பள்ளி மாணவரோடு கலந்துரையாடல், நேரிடை
அனுபவக் கல்வி என சிறப்பான வசதிகளை உள்ளடக்திய பள்ளியாக திகழ்கிறது.
பள்ளி விழாவில் பரதம், கிராமிய பாடலுக்கான ஆடல், பாடல், ஒயிலாட்டம்,
மயிலாட்டம், சிலம்பாட்டம், நாடகங்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு,
மலையாளம், இந்தி என 5 மொழிகளில் ஆடல் நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள்
அசத்தினர்.
விழாவினை ஆசிரியர்கள் ரேவதி, ரேணுகா ஒருங்கிணைத்தனர்.
முடிவில் ஆசிரியர் ஹரிஹரன் நன்றி கூறினார்.
நல்லூர் ஒன்றிய பள்ளி - கருணை உண்டியல் திட்டம்
PANCHAYAT UNION PRIMARY SCHOOL
Periyanesalur post
Nallur block
Veppur Tk
Cudalore Dt
"அறம் செய விரும்பு"
இன்று எங்கள் பள்ளியில்" கருணை உண்டியல் திட்டம் " தொடங்கியுள்ளோம்.
இதன் மூலம் மாணவர்களுக்கு,
உதவும் மனப்பான்மை
சேமிக்கும் பழக்கம்
பணத்தை சரியான முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை வளர்த்தல்.
முதலில் நான் மாணவர்கள் முன் நூறு ரூபாய் பணம் கருணை உண்டியலில் போட்டேன், உதவி செய்தோரே உயர்ந்தவர் எனவும், உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கூறினேன்.
மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உதவுவதாக கூறினார்கள். மாணவர்கள் அனைவருக்கும் காசு கொடுத்து கருணை உண்டியலில் அவர்கள் கையாலே போடச்சொன்னேன் மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி...
R.PADMAASRRI Teacher PANCHAYAT UNION PRIMARY SCHOOL Periyanesalur post Nallur black Veppur Tk Cudalore Dt Pin 606304

பெண் Queen - 2018 இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியை திருமதி.லதா பாலாஜி
இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியை திருமதி.லதா பாலாஜி
மாணவ/மாணவியரின் மனதை கொள்ளை கொண்ட ஆசிரியர் ......சலிக்காத உழைப்புக்கும் ,நல்ல சிந்தனைக்கும் சொந்தக்காரர் .
பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுபவர்.
சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக வளைய வருபவர் ..பிள்ளைகளின் தன்னம்பிக்கையை பலப்படுத்தி ,பன்முக திறமைகளை மெருகேற்றி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துபவர். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து ,வெற்றி பெற வைத்து சாதனைகளை படைக்கச்செய்வதில் முக்கிய காரணமாக இருப்பவர்.
சூரிய பெண்மணி விருது பெற்றதில், விருதிற்கே பெருமை சேர்த்த சாதனைச்சகோதரி மென்மேலும் விருதுகளை குவித்து ,தன் அர்பணிப்பான கல்விப்பணியை தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன் ..நலமுடன் .... சாதனைப்பயணம் தொடரட்டும்.....

Subscribe to:
Posts (Atom)