பெண்மையை போற்றுவோம்!
“உயிரைகாக்கும் உயரினை சேர்த்திடும் உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்த பெண்மை இனிதடா இனிதடா ............................
நற்குணமுடைய வேந்தை
நயந்து சேவித்தலொன்று
பொற்புடை மகளிரோடு
பொருந்தியே வாழ்தலொன்றுபற்பல ரோடு நன்னூல்.
பகிர்ந்துவாசித்த லொன்று
சொற்பெரும் இவைகள் மூன்றும்
இயற்கையின் சொர்க்கம் தானே ....என்று விவேக சிந்தாமணியில் எது சொர்க்கம் என்பதில் நடுநாயகமாக ,உச்சிதிலகமாக புனிதவதியாக ,மென்மையானவளாக ,மலர்ந்த முகமுடையவளாக ,இன் சொல்லரசியாக புன்சிரிப்பின் பெட்டகமாக ,சுதந்நிரச்சிந்தனை படைப்பாளியாக,உரிமைகளைக்கட்டிக்காத்து தக்க வைக்கும் தாயாக ,
வழிபடும் தெய்வமாக ,வழிகாட்டும் கருவியாக, வலம் வரும் பெண்மையைப்போற்றுவோம்!
“உள்ளே உயிர் வளர்த்து
உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளி இடும் வேளையெல்லாம்
அன்பையே சேர்த்தனைத்து
தொல்லை தனக்கென்றும்
சுகமெல்லாம் நமக்கென்றும்
சொல்லாமல் சொல்லி இடும்
தேவதையின்கோவில்அது
தினம் பசித்த முகம் பார்த்து
பழகும் விழி பார்த்து
பழம்தரும் சோலையது
இருக்கும் பிடிசோறும்
தனக்கென எண்ணாமல் கொடுக்கின்ற கோவில் அது
அது தூய்மை நேர்மை வாய்மை அதன்பேர் தாய்மை ... என்ற கவியரசு கண்ணதாசனின் வார்த்தைகளை மெய்யாக்குவோம் .... ஆக பெண் என்பவள் மகளாக மனைவியாக தாயாக தன்னலம் கருதாத தொண்டுள்ளம் கொண்டவளாக சேவகியாக உதவுவதன் மூலம்உயிர்களை வாழ்விக்க முடியும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் ஜீவனாகிய பெண்ணின் சிறப்புகளை உயர்வினைப்போற்றுவோம்! வாழ்த்துவோம்! வணங்குவோம்! வாழ்க பெண்மை ! வளர்க அவள் நல்லறம்!
No comments:
Post a Comment