https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியை மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு பல்வேறு மாற்றங்களைப் பள்ளி கல்வித் துறை சார்பில் செய்துவருகிறது. 500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 318 அரசுப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

மன உளைச்சலுடன் புலம்பும் தலைமையாசிரியர்கள்

மன உளைச்சலுடன் புலம்பும் தலைமையாசிரியர்கள்

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!

சென்னை : தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்குவதையொட்டி நீட் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு முறையில் நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுவதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் மருத்துவ இடங்களை பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் வரை அரசு நீதிமன்றம் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிவிடும் என்று மாணவர்கள் காத்திருந்தனர். அதோடு நீட் தொடர்பான புரிதல் அதிக அளவில் மாணவர்களுக்கு இல்லாததால் நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடர்பாடுகள் இருந்தன.
கட்டாயமான நீட் தேர்வு தவித்த மாணவர்கள் ஆனால் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டும் விலக்கு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் சிரமங்களை சந்திப்பதால் நீட்இலவச பயிற்சி வகுப்புகளை அரசு அறிவித்தது.
அரசு இலவச பயிற்சி அரசின் இலவச பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 419 மையங்களில், 70 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற்றனர். இந்நிலையில் நீட் இலவச பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
மார்ச் 1ல் பொதுத்தேர்வு பொதுத்தேர்வு எதிரொலி +2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குவதால் நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச வினாவிடை புத்தக விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
கவலையில் மாணவர்கள் கவலையில் மருத்துவ கனவு மாணவர்கள் பொதுத்தேர்வுகள் காரணமாக நீட் இலவச பயிற்சி நிறுத்தப்பட்டிருப்பதாக காரணம் கூறப்பட்டாலும், மருத்துவ கனவுடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் ஒரு வித குழப்பமே ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது, மார்ச் 9க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் மே மாதத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் பேசும் பழங்குடியினக் குழந்தைகள்! - கடலூரைக் கலக்கும் அரசுப் பள்ளி

ஆங்கிலம் பேசும் பழங்குடியினக் குழந்தைகள்! - கடலூரைக் கலக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை சுகன்யா
பழங்குடியின மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்து அசத்திக்கொண்டிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர். ' ஊசி, பாசி விற்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழியாகவே ஆங்கிலத்தைப் படிக்க வைத்தேன்' என நெகிழ்கிறார் ஆசிரியை. 
கடலூர் மாவட்டம், பெண்ணாடம்(மேற்கு) பகுதியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. முழுக்க ஊசி, பாசி விற்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் நிரம்பியுள்ள பகுதி இது. இந்தப் பள்ளிக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியையாக வந்தார் கீதா சதீஷ். தொடக்கத்தில் பல சவால்கள் அவருக்குக் காத்திருந்தன. பல நாடோடிக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதையே விரும்பவில்லை.
அவர்களது பெற்றோருக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, அந்தக் குழந்தைகளை வகுப்பறைக்குள் வரவைத்தார். அடுத்ததாக, ' நகரத்தில் படிக்கும் குழந்தைகளைப் போல, அவர்களும் ஆங்கிலம் கற்க வேண்டும்' என விரும்பினார். ஆனால், அவ்வளவு எளிதாக அது சாத்தியமாகவில்லை. இதன்பின்னர் நடந்த விஷயங்களை நம்மிடம் விளக்கினார் கீதா. 
" மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தொடக்ககால கனவாக இருந்தது. ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண் குறைந்ததால், மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, ஆசிரியர் பணியைத் தேர்வு செய்தேன். மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பது பிரதான கடமையாக இருந்தாலும், அவர்களுடைய மொழி அறிவை வளர்க்க வேண்டியது கட்டாயம் எனக் காலப் போக்கில் உணர்ந்தேன்.
என்னுடைய வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சத்துணவு வாங்கும் வரிசையில் நின்றிருந்தான். உணவுத்தட்டு கூட இல்லாமல் ஒரு தேக்கு மர இலையைப் பறித்து உணவு வாங்கிச் சென்றான். உணவின் சூடு பொறுக்க முடியாமல், அவனது கண்கள் கலங்கியதைக் கவனித்தேன். உடனடியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் வாங்கித் தந்தேன். இங்கு படிக்கும் மாணவர்களில் பலரும் பழங்குடியின மற்றும் நாடோடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். கோவில் திருவிழா காலங்களில் ஊசி, பாசி விற்கவும் சோதிடம் பார்க்கவும் குடும்பத்துடன் சென்றுவிடுவர். அதனால், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருந்தது. 
இந்த விகிதத்தைக் குறைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. 100 சதவிகிதம் வகுப்பறைக்கு வரும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை பரிசு வழங்கி வருகிறேன். இந்தப் பரிசை வாங்குவதற்காக வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நான் நினைத்ததுபோலவே இடைநிற்றல் பெருமளவு குறைந்துவிட்டது. அடுத்ததாக, மாணவர்களிடம், 'பாத்திரமேற்று நடித்தல்' எனும் முறையைச் செயல்படுத்தியுள்ளேன். பாத்திரமேற்று நடிக்கும் போது, எளிதில் பாடங்களை உள்வாங்கிக் கொள்கின்றனர். படிப்பின் மீது அவர்களுக்கு இருந்த பயம், முற்றிலும் அகன்றுவிட்டது.
இதையெல்லாம்விட, ஆங்கிலம் கற்பது அவர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. எத்தனை வகுப்புகள் எடுத்தாலும், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களுடைய மொழியை நான் கற்றுக்கொண்டேன். இப்போது அவர்களுடைய மொழியிலேயே பாடம் நடத்துகிறேன். இந்த முயற்சியால், மாணவர்கள் எளிதாகப் பாடங்களை கற்றுக்கொள்ளவும் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசவும் தொடங்கிவிட்டனர்" என்றார் உற்சாகத்துடன்.
© COPYRIGHT VIKATAN.COM 2017. ALL RIGHTS RESERVED

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள். கல்வி துறையில் வரும் ஜூன் 2018 முதல் DE0, DEEO பதவி மாற்றப்பட்டு நான்கு ஒன்றியத்திற்கு ஒரு DE0 மாவட்டத்திற்கு ஒரு CE0. AEEO பதவிகள் மாற்றம் இல்லை. SSA , RMSA மூடப்படுகிறது . DIET + DE0 அலுவலகம் இணைக்கப்படுகிறது. 1 முதல் 12 வகுப்பு வரை மாவட்டத்தின் அனைத்து அதிகாரமும் CEO கையில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமனம் வரை செய்யும் அதிகாரம் சிஇஓ க்குஅளிக்கப்படும். சிஇஓ க்கள் இடமாறுதல்,17A, 17B மற்றும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. JDமற்றும் இயக்குநர் க்கு மேல்முறையீட்டு அதிகாரி மற்றும்,பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை சரி செய்யும் அதகாரம் வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள் சிஇஓ க்களுக்கு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது | செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித்தேர்வு (டெட்) விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5 முதல் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடக்கும். இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்புகள் வருகிற 25-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 4-ம் தேதியும் காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26430029 என்ற தொலைபேசி எண் மற்றும் 98842-93051 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.