https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு

13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். இதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும்எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில்வெளியாகும்.

ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள்காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம்பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வுகள் எப்போது பதவி காலியிடம் அறிவிக்கை தேர்வு நாள்'ரிசல்ட்' நாள்

 வேளாண் பயிற்றுனர் 25 ஏப்.,ஜூலை, 14 ஆக.,

பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,065 மே ஆக.,4 செப்.,

கலை கல்லுாரி உதவி பேராசிரியர் 1,883 மே ஜூன், 2ம் வாரம்சான்றிதழ் ஆய்வு

ஜூலை உதவி தொடக்க கல்வி அதிகாரி 57 ஜூன் செப்.,15

அக்.,'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை அக்.,6, 7 நவ.,

*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்.

TERM 3 : BOOK BACK Q&A

http://www.thodakkakalvi.com/p/term-3-book-back-q.html

நல்லூர் ஒன்றிய - கடலூர் மாவட்ட கீதா அசிரியர்

- புதுமை படைக்கும் -கடலுர்மாவட்டம், நல்லூர் ஒன்றியம்,
பெண்ணாடம்(மேற்கு).
ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் 3 ம்வகுப்பு
ஆசிரியர் திருமதி . கீதா.



...அவரின் முகநூல் பக்கத்திலிருந்து...
நான் மருத்துவத்திற்கான நுழைவு தேர்வில் 5 மார்க் குறைந்ததால் மருத்துவம் படிக்க முடியவில்லை. எனவே Anna University engineering படிக்க வாய்ப்பு கிடைத்தும் செல்லாமல் ...நான் ஆசிரியராக சென்று மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்து சாதனையாளராக உருவாக்க வேண்டும் என்று ஆசிரியர் பணியை விரும்பி தேர்வு செய்தேன்....
ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும் ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும் எனபதை உணர்ந்தவளாக என்னுடைய முதற்பயணம் ஆரம்பமானது.
ஒரு நாள் மதியம் சத்துணவு நான் பார்க்கும் முறை. உணவு வாங்கும் வரிசையில் என்னுடைய வகுப்பு (3) மாணவர் தட்டு கூட இல்லாமல் ஒரு தேக்க இலையை பறித்து உணவு வாங்கி அதனின் சூடு பொறுக்காமல் அவனின் கலங்கிய நிலை கண்டு என் மனம் இளகி போனது . உடனே என் வகுப்பு செல்வங்களுக்கு அழகிய lunch boxes வாங்கி கொடுத்தேன் .
எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஊசி பாசி விற்பவர்கள்,மலையாள சோதிடர்கள்,ஆதிதிராவிடர்,பழங்குடி இருளர்கள்.இவர்கள் திருவிழா சமயத்தில் ஊசி,பாசி விற்க, சோதிடம் பார்க்க குடும்பத்துடன் சென்று விடுவர்.எனவே drop outs அதிகமாக இருந்தது
இதனை குறைக்க என்ன வழி என்று நான் யோசித்து கண்டு பிடித்தது தான் full attendance price for every month.இதன் மூலம் இடைநிற்றல் வெகுவாக குறைந்துள்ளது...குழந்தைகள் விடுப்பு எடுக்காமல் ஆர்வமாக பள்ளிக்கு வர தொடங்கினார்கள்...ஒவ்வொரு மாதமும் என்னுடைய சொந்த செலவில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி வருகின்றேன்..
எனது மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியராகிய எனக்கு இருக்க
வேணடும்....என்பதை புரிந்துகொண்டவளாக..
பாசி ஊசி விற்கும் சமூகத்தை சார்ந்த குழந்தைகள் படிப்பில் பின் தங்கி இருந்தனா்...அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற அந்த குழந்தைகளிடம் அவர்களின் மொழியை(VagriBoli) கற்றுக்கொண்டு அவர்களது மொழியில் நான் பேச குழந்தைகள் ஆங்கிலத்தை எளிதாக கற்க தொடங்கிவிட்டனர்...மாணவர்களும் ஆர்வமாக படிக்க தொடங்கிவிட்டனர்...
அனைத்து பழங்குடி குழந்தைகளையும் ஆங்கிலத்தில் அழகாக பேச வைக்கின்றேன்.
என்னுடைய கற்பித்தல் முறைகள்;
நான் பாடத்தின் தன்மை, மாணவர்களின் தன்மை, அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு கற்பித்தல் முறையை திட்டமிடுகின்றேன் ..நான் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகள்.
நடித்தல் முறை கற்பித்தல் :செய்கை முறை கற்பித்தல் எனக்கென தனிமுறைகளை பயன்படுத்துகின்றேன்..
மேலும்
பாத்திரம்மேற்றுநடித்தல் மாணவர்கள் செயற்பாட்டு அனுபவம் திருப்தி பெறுகின்ற கற்பித்தல் முறையையும் நான் பயன்படுத்துகின்றேன் .பாத்திரமேற்று நடித்தலின் போது ஓர் உயிர்துடிப்புள்ள பாத்திரத்தை அல்லது சந்தர்பத்தை மாணவர்களால் நடித்துக் காட்டுகின்றார்... எனவே மாணவர் மிகவும் விருப்பத்தோடு செயற்படுவதற்கு இந்த நுட்ப முறை நன்கு உதவுகிறது...
கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பித்தால் மட்டுமே மாணவர்கள் அனைவரும் மற்றவர்களுடன் அன்பாக பழகுவார்கள். அதனால் என் மாணவர்கள் அனைவருக்கும்
brother,(சகோதரர்கள்) sister (சகோதரிகள்) என்று அழைக்க பழக்கபடுத்தி உள்ளேன்..
Can I go to toilet?Can I drink water? என்று தான் அனைத்து மாணவர்களுமே கேட்கச் சொல்லி கொடுத்துள்ளேன்.
Sorry சொன்னால் It's Ok என்பதும்,அவர்கள் கைத்தட்டல் பெறும் போது THANK U TO ALL , அதற்கு கைத்தட்டியவர்கள் Welcome brother or sister எனறு கூறுமாறு என் மாணவர்களுக்கு நல்ல பண்பை கற்று கொடுத்து வருகின்றேன்....
குழந்தைகளின் நல்ல செயல்பாடுகள் அவர்கள் பெற்றோர்களுக்கே மகிழ்ச்சி அளிக்கும் எனவே ஒரு ஆசிரியராகிய நான்
மாணவர்களுக்கு பரிட்சை வைத்து நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களை பாராட்டி ஊக்கபடுத்தி பரிசுகள் வழங்கி வருகின்றேன்..இதனால் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்..வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எனது பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்து வருகின்றேன்...மேலும் எனது
மாணவர்கள் அனைவருக்கும் கண் கட்டி வித்தை மூலம் மாவட்டங்களை எளிமையாக கூறி மாணவர்கள் விரும்பி படிக்க நான் பல முறைகளை செயல்படுத்துகின்றேன்.
நான் மேடை பேச்சாளார்...எனவே என்னுடைய மாணவர்களையும் மேடை பேச்சளராகவும் உருவாக்கி வருகின்றேன்....மேலும் பள்ளி மாணவர்கள் சிறுவயதில் உதவும் எண்ணத்தை அவர்கள் மனதில் விதைக்க கருணை உண்டியல் திட்டம் தொடங்கி எங்களால் முடிந்த சிறு தொகையை உண்டியலில் செலுத்தி அதில் சேமிக்கும் பணத்தை மாணவர்கள் விருப்பத்தின் படி அருகில் உள்ள ஏழைகளுக்கு மாதந்தொறும் உதவி வருகின்றோம்....
மாணவர்களிடம் சுத்தத்தை பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்துவதற்காக தினந்தொறும் சாப்பிடு முன்னும் கழிப்பறை சென்று விட்டு வந்த பின்னும் சோப்பிட்டு கை கழுவும் பழகத்தையும் சொல்லி கொடுத்துள்ளேன்....
தினந்தோறும் செயல்படுத்தி ?வருகின்றேன்...
பெண்கள் மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் கல்வியில் தனிகவனம் எடுத்து வருகின்றேன்....
மாதந்தோறும் மாணவர்கள் கல்வி சமபந்தமாக அவர்களது பெற்றோருடன் கலந்து உரையாடி வருகின்றேன்...
மாதந்தோறும் எனது மாணவர்களை ஊக்கபடுத்த என்னால் முடிந்த பரிசு பொருட்களை வாங்க எனது சம்பளத்தில் ஒரு பகுதியை செலவு செய்கின்றேன்...
இவ்வாறு நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக இவரது வகுப்பறை வாசனையாகி சுகந்த நறுமணத்தை வீச வைக்கும் ஆசிரியராக விளங்க ஆசைப்படுகின்றேன்
வீ.கீதா.
ஊ.ஒ.ந.நிலை. பள்ளி,
பெண்ணாடம்( மேற்கு)
நல்லூர் ஒன்றியம்,
கடலூர் மாவட்டம்.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது என்னுடைய திண்ணம்.
கண்டிப்பாக என் மாணவர்கள் ஒருநாள் சிகரம் தொடுவார்கள் என்ற நம்பிக்கை ஆசிரியராகிய எனக்கு என்றும் உண்டு...நன்றி..

காவேரி வீதி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஈரோடு - 3

தேசிய அறிவியல் தினம்
28 - பிப்ரவரி -2018

 

எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்த சிறப்பு அழைப்பாளர்களான அரசுப் பள்ளி குழந்தைகள்...
தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளி, கொங்காடை, அந்தியூர் ஒன்றியம்.ஈரோடு மாவட்டம்.
1. M.சின்னக்கண்ணு VII th
2. R.ராஜ்குமார் VIII th
3. T. நாகராஜ் VIII th
இக்குழந்தைகளுடன் ஆசிரியர் திரு.நித்தியானந்தம் அவர்கள்...
குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்து தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வான மலைப்பகுதி சிறுவர்கள் ..
இன்று மதியம் 3.00 மணிக்கு குழந்தைகள் மகிழுந்தில் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் வாங்கப்பா என்றேன், அவர்களின் ஆசிரியரை இதுநாள் வரை நான் பார்த்தது கூட இல்லை ஆனால் அவர் என்னை நன்குத் தெரியும் என்றார், என் பெயர் சொல்லி அழைத்தார் பிறகு நான் குழந்தைகளிடமும், ஆசிரியரிடமும் உரையாடினேன் அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அக்குழந்தைகளின் மிகப் பெரிய சாதனையை இக்குழந்தைகளுக்கான அன்பளிப்பு பரிசுப் பொருட்கள் நானே தேர்வு செய்து வாங்க அனுமதி வழங்கிய எங்கள் பள்ளி தலைமையாசிரியருக்கு நன்றி, இன்று M.சின்னக் கண்ணன் பேசியது அருமையிலும் அருமை அரசுப் பள்ளிகளுக்கு பெருமை, இக்குழந்தைகளின் வருகை எங்கள் பள்ளிக்கு பெருமை... JCI ஈரோடு அமைப்பினருக்கு நன்றி...
அவர்களின் சாதனைகள் அறிந்து கொள்ள கீழே உள்ள Link ஐ தொடவும்..
குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் படித்து தேசிய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வான மலைப்பகுதி சிறுவர்கள்! -
 https://www.vikatan.com/news/tamilnadu/112239-these-kids-have-been-selected-for-national-level-expo.html

ஆலம்பட்டி , மதுரை மாவட்டம் ஊ.ஒ.தொ.பள்ளி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

தேசிய அறிவியல் தினம்- அறிவியல் கண்காட்சி


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாடப்பகுதிகளை விளக்கும் எளிய படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
கண்காட்சியின் நிறைவாக மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

Book Back Q&A - 5th std