https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள்மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.அவர்கள்உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் வருமா?’ - வலுக்கும் புதிய கோரிக்கை

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் வருமா?’ - வலுக்கும் புதிய கோரிக்கை



பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் தொடந்து 5 நாள்களும் கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கலவை சாதங்கள் பிடிக்கவில்லை. அதனால் 90 விழுக்காடு மாணவர்கள் கலவை சாதத்தை உட்கொள்ளாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள்.

இதனால் கிராமப்புற ஏழை எளியமாணவர்களுக்கு சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயநிலை உள்ளது. அதனால் தமிழக அரசு இதை ஆய்வு மேற்கொண்டு, அரசு மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்கிறார்கள் தமிழ் சமூக கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.இதுபற்றி தமிழ்ச் சமூக கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பாய கூறுகையில், ``2015-க்கு முன்பு தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் வெள்ளை சாதம், காய்கறி, பருப்பு சாம்பாரோடு, முட்டை சேர்த்து மதிய உணவாக வழங்கப்பட்டு வந்தது. இதைச் சுவையாகச் சமைத்துக் கொடுக்கும்போது மாணவர்கள்நன்றாகச் சாப்பிட்டு வந்தார்கள். அதன்பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்தோடு சத்துணவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று 2016-க்குப் பிறகு, அரசுப் பள்ளி செயல்படும் 5 நாள்களும் மதியம் கலவை சாதங்கள் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதியம் புளி சாதம்,எலுமிச்சைச் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், பிஸ்பேலா பாத் போன்ற கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை எவ்வளவு சுவையாகக் கொடுத்தாலும் கிராமப்புற மாணவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. காரணம் நம்முடைய தமிழர் நிலத்தின் தட்பவெட்ப நிலையிலும் கலாசார பண்பாட்டாலும் வறட்சியான கலவை உணவுகளைப் பெரும்பாலும் விரும்பி உட்கொள்ள மாட்டோம்.

அதேபோல அரசுப் பள்ளியில் மதியம் வழங்கப்படும் கலவை சாதங்களைக் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பெரும்பாலும் சாப்பிடாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள். இதுதொடர்பாக 7 பள்ளிகளில் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் விசாரித்தபோது, மதியம் வெள்ளை சாதத்தோடு, சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சாப்பிடுவதையே விரும்புவதாக 90 விழுக்காடு மாணவர்கள் தெரிவித்தார்கள். இது சத்துணவு அமைப்பாளர்களுக்கும் தெரியும். அரிசி செலவு குறைவதால், இதை அவர்கள் கண்டுகொள்வதில்லை.

அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தால், மாணவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதனால் தமிழக அரசு இதை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நூலக உறுப்பினர்களாக சேர்க்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

இடமலைப்பட்டிப்புதூரில் -குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது


ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இடமலைப்பட்டிப்புதூரில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது ..... 

நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி 26-ம் தேதி 2018 (Nationa| De worming Day) விடுபட்ட குழந்தைகளுக்கு (Mop up Day) மார்ச் 01ம் தேதி 2018 செய்யக் கூடியவை...............குடற்புழு மாத்திரையை எப்பொழுதும் சப்பி அல்லது நன்றாக மென்று சாப்பிடச் செய்ய வேண்டும்.. செய்யக் கூடாதவை : 1 நோய்வாய்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கக் கூடாது 2. மாத்திரையை அப்படியே விழுங்கச் செய்யக் கூடாது. புழுத்தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ...... 1 Uசியின்மை 2. இரத்த சோகை 3. குமட்டல் வாந்தி 4 வயிற்று வலி 5. சோர்வு சுகவீனம் 6. குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது பிற நோய் தொற்று ஏற்படலாம்.. அல் பெண்டேசால் மாத்திரை மூலம் குLற்புழு தொற்றிலிருந்து விடுபடலாம்.குழந்தைகளுக்கு மாத்திரை கொடுத்து நன்றாக சப்பி மென்று சாப்பிடுவதற்கு அறிவுறுத்தி பார்வையிட வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இடமலைப்பட்டி புது ரில் பிப்ரலரி 26.02.2018 அன்று வருகைப் புரிந்த அனைத்து குழந்தைகளுக்கும் .குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது" .......... அன்று பள்ளிக்கு வராமல் விடுப்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 1/3/2018 அன்று வழங்கப்பட்டது .....

நன்றி சுகாதார செவிலியர் 
.

3rd Std - FA b Question Paper -TEST No - 3