https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

கோக்கலூர் - ஊ.ஒ.தொ. பள்ளி

எல்லோரும் வாங்க வாழ்த்துங்க
தங்கள் வரவை நோக்கி......
மாணவர்கள் & ஆசிரியர்கள்

ஊ.ஒ.தொ. பள்ளி - கோக்கலூர்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது | செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித்தேர்வு (டெட்) விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5 முதல் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடக்கும். இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்புகள் வருகிற 25-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 4-ம் தேதியும் காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26430029 என்ற தொலைபேசி எண் மற்றும் 98842-93051 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்


TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன

விளம்பர எண்: 492

விளம்பர நாள்: 01.03.2018

விண்ணப்பிக்க கடைசி நாள் 16.04.2018

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I - Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools

3. 124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)
4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual
துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு

பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு

பிஎட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் .

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஎட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

ஆசிரியர் படிப்பு தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஎட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .

இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை.

இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஎட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில் ஆனால் பிஎட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை .

இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .

அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்படுகின்றது ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஎட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் .

தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது .

இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் தேர்வுப் பணி ஒதுக்கீடு - பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் தேர்வுப் பணி ஒதுக்கீடு - பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறி?

பகுதி நேர ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறி?


பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர்களை வெளியிடும் திட்டமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!!


பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர்களை வெளியிடும் திட்டமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!!

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் 

பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூக சேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது

மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது