trail
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .
அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் வாக்குச்சாவடி பொறுப்பு: ஆசிரியர்கள் கோரிக்கை.
*பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வாங்கிட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிதி அனுமதித்து அரசாணை வெளியீடு*
புனவாசிப்பட்டி-ஊ.ஒ.தொ.பள்ளியில் - ஊர் கூடி தேர் இழுத்த -பள்ளி ஆண்டு விழா
ஊர் கூடி தேர் இழுத்த
-பள்ளி ஆண்டு விழா
கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம்ஒன்றியம்,புனவாசிப்பட்டி-ஊ.ஒ.தொ.பள்ளி
-பள்ளி ஆண்டு விழா
கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம்ஒன்றியம்,புனவாசிப்பட்டி-ஊ.ஒ.தொ.பள்ளி
ஊர் கூடி தேர் இழுத்த -பள்ளி ஆண்டு விழா கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம்ஒன்றியம்,புனவாசிப்பட்டி-ஊ.ஒ.தொ.பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009, விழிப்புணர்வு ஆண்டுவிழா 01-03-2018 அன்று வெகு விமரிசையாக நடத்தப்பட்டது...
இவ்விழாவினை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.ராஜலிங்கம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார் .
பள்ளி தலைமை ஆசிரியை தருமதி.இரா.விஜயகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளி உதவி ஆசிரியை திருமதி.சி.சிவச்செல்வி அவர்கள் பள்ளி ஆண்டறிக்கை நிகழ்த்தினார்.
கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.குமுதா அவர்கள் , அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார மேற்பார்வையாளர் திருமதி.கவிதா அவர்கள், ஆசிரிய பயிற்றுநர் திரு.ரவிக்குமார் அவர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டுரை வழங்கினர்.
ஊர் நாட்டாமை,காரியக்காரர் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையாளர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பிற பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் , ஊர் பொதுமக்கள்,முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
பள்ளி் மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
விழா ஏற்பாட்டினை பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் ,முன்னாள் மாணவர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
பள்ளியின் உதவி ஆசிரியர் திரு.இரா.கோபிநாதன் அவர்கள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினர்.
Reciprocal LEARNING- எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?
எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?
படிக்கத் திணறும் மாணவர்களுக்கும், பாடத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட, பாடத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவிய முறைகளைப் பற்றி பல தகவல்கள் உள்ளன. குறிப்பாக, வகுப்பில் ஒரு இடத்தில் உட்கார முடியாமல் கவனம் இங்கும் அங்கும் சிதறி அலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, வகுப்புகளில் அவர்களின் முழுக் கவனம் கூடிய பங்கேற்பும்,
தமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்..!
தமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்..!
தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு பள்ளிகளில் விரைவில் ஆய்வு...
பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
சென்னை : தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவும் பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் மொழிப் பாடத் தேர்வுகள் முடிந்த நிலையில், தொடர்ந்து ஆங்கிலம் மற்ற பிற பாடத் தேர்வுகள் நடக்க உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவர்கள் எழுதி வருகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 53 ஆயிரத்து 629 தனித்தேர்வர்கள் இந்த பொதுத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். தமிழ் வழியில் பயின்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 771 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
பறக்கும்படைகள் தீவிரம்
தேர்வுப்பணியில் 75 ஆயிரம் பேர்
இதற்காகத் தேர்வு மையங்கள் அரசுப் பள்ளிகள் தவிர, பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகளில் மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வைக் கண்காணிக்கும் பறக்கும் படையில் மட்டும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவ மாணவிகளுக்கு விதிகள்
ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடு
மாணவ மாணவிகள் தேர்வு அறைக்கு கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது, காலணிகளைத் தேர்வு எழுதும் அறைக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும், ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
பள்ளிகளிக்கு தீவிர கட்டுப்பாடு
மேலும் பள்ளிகளுக்கு, தேர்வு தொடங்கும் முன்னர் காலை 8.30 மணிக்குள் அந்த பள்ளியைச் சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறி விட வேண்டும். விடைத்தாள் கட்டுகள் பள்ளியில் இருந்து சென்ற பின்னரே அவர்கள் மதியம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தேர்வு நேரத்தில் பள்ளி வாளகத்தில் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் ரத்தாகும்
துறை ரீதியான நடவடிக்கை
பள்ளியில் தேர்வு எழுதும் தங்கள் மாணவர்களுக்கு உதவ முற்பட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து மாவட்ட பள்ளி கல்விதுறை பரிந்துரைக்கும். தேர்வு அறையில் துண்டு சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தேர்வு கண்காணிப்பு அறை அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்
5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்
டெல்லி: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சிக்கிம், புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உட்பட 6 மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாதிரி , ஒலக்கூர் ஒன்றியம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
பத்தாண்டுகள் பணி முடித்த மகிழ்ச்சியை குழந்தைகளுடன் கொண்டாடிய அற்புத ஆசிரியர்:
திரு.கணபதி ஹரீஷ்
திரு.கணபதி ஹரீஷ்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி- பாதிரி , ஒலக்கூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்:
Subscribe to:
Posts (Atom)