https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் இயங்கி வந்த தனியார் மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரத்தை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., ரத்து செய்தது. இதுகுறித்து, மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், '2016 -17 கல்வியாண்டில், தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரியில், இடமளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தனியார் கல்லுாரியைச் சேர்ந்த, 144 மாணவர்களுக்கும் சிறப்பு கவுன்சிலிங், சென்னையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், நேற்று நடந்தது. இதில், அனைத்து மாணவர்களும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து, தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறியதாவது:அரசு மருத்துவ கல்லுாரிகளில், சென்னை, ஸ்டான்லி மற்றும் புதுக்கோட்டை மருத்துவ கல்லுாரிகளை தவிர, பிற மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் இடங்களை அதிகரித்து கொள்ள, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. அதன்படி, 144 மாணவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment