https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

*டி.இ.இ.ஓ. பதவி ஒழிப்பு: தமிழக அரசு முடிவு *4 ஒன்றியங்களுக்கு ஒரு DEO நியமனம். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முழு அதிகாரம்!!!

*டி.இ.இ.ஓ. பதவி ஒழிப்பு: தமிழக அரசு முடிவு *4 ஒன்றியங்களுக்கு ஒரு DEO நியமனம். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முழு அதிகாரம்!!!

பள்ளிக்கல்வி - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'

ஈரோடு: ''மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், காராப்பாடியில், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் துவங்கவுள்ளது. பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிடவும், மேல்நிலை படிப்புக்கு பின், எந்த கல்லுாரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, 'ஹெல்ப்லைன்' வசதி விரைவில் துவக்கப்படும். மாணவர்களின் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்கவும், 'சிநேகா' என்ற தொண்டு நிறுவனத்துடன், கல்வித்துறை இணைந்து, மாணவர்களின் வீட்டிற்கே சென்று, 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவுக்கு குக்கர்

சத்துணவுக்கு குக்கர்

தமிழகத்தில் 19 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு தலா 2,500 ரூபாய் மதிப்பிலான குக்கர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு குறைவாக சத்துணவு அருந்தும் 19 ஆயிரம் மையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் இவை வழங்கப்படும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!

Primary School Education Site TERM 3 3rd Std English Book Back Q&A

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்:
மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து தேர்வெழுதும் மாணவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்வுத் துறை விதித்துள்ளது. அதன் விவரம்: தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் பக்க எண்ணிக்கையை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத் தாளின் முகப்பு பக்கத்தில் புகைப்படம், பெயர் ஆகியவை தங்களுடையதுதானா என்றும், தேர்வு எழுத உள்ள பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். தேர்வுக் கூடத்துக்கு துண்டுச் சீட்டுகள் எடுத்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு: மாணவர்கள் தேர்வு எழுதும் போது விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தமது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது. கூடுதல் விடைத்தாள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்களில் எழுதுவதற்கு முன்னதாக கூடுதல் விடைத் தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள் அந்தந்த பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர "ஓவர் சாய்சில்' எழுதிய விடைகளைக் கோடிட்டு அடித்தால், அந்த விடை தன்னால் எழுதப்பட்டது என்று குறிப்பு எழுத வேண்டும். அதில் அறைக் காணிப்பாளர் கையொப்பம் இடக்கூடாது. மேலும் மாணவர்கள் வராத இடத்தில் வேறு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதக் கூடாது.

தேர்வு அறைக்குள் நுழையும் முன்பே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபார்த்து காலணி, பெல்ட் ஆகியவற்றை வெளியில் விட்டுவிட்டு இருக்கையில் சென்று அமர வேண்டும். தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தாங்கள் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில விடைகளையோ தாமே அடித்து விட்டால் அது ஒழுங்கீனச் செயலாக கருதப்படும். விடைத் தாளில் விடைகள் எழுதி முடித்த பிறகும் மீதம் உள்ள வெற்றுப் பக்கங்களில் குறுக்கே கோடிட வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகள் தேர்வுத் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆசிரியரின்றி இயங்கும் ஆங்கிலவழி பள்ளிகள்...

தமிழகம் முழுவதும் ஆசிரியரின்றி இயங்கும் ஆங்கிலவழி பள்ளிகள்...

ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...!

நீங்க இத மட்டும் செய்யுங்க...! உங்க விஷயத்துல நாங்க தலையிடமாட்டோம்...! ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...!

கடந்த 21 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்லவும் முயன்றனர். இதனையடுத்து பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வேலை செய்யும் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினால் ஹைகோர்ட் தலையிடாது எனவும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை...! முடிவுக்கு வருமா ஜாக்டோ ஜியோ போராட்டம்...?

இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை...! முடிவுக்கு வருமா ஜாக்டோ ஜியோ போராட்டம்...?



பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு இதுவரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்

பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்


குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'நிடி ஆயோக்' வெளியிட்ட சுகாதார குறியீட்டில், கேரள மாநிலம், நாட்டிலேயே முதலிடத்தை பெற்றது. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும், சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், புதிய சுகாதார கொள்கையை அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

திட்டக் குழு உறுப்பினரும், கேரள பல்கலையின் முன்னாள் துணைவேந்தருமான, இக்பால் தலைமையில், 17 பேர் அடங்கிய கமிட்டியின், புதிய சுகாதார கொள்கைக்கு, முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டது.இதன்படி, பள்ளிகளில், முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும் போது, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளுக்கேற்ற வகையில், சுகாதாரமான கழிப்பறைகள் அமைத்தல்; பெண்கள் படிக்கும் பள்ளி களில், சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் அகற்றும் இயந்திரங்களை பொருத்துதல் உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி

பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி


அதிக விபத்துகள் நிகழும் நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விபத்தில்லா பயணம் மேற்கொள்வது சவாலாக உள்ளதுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேற்கொண்டாலே, விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனி மனித விழிப்புணர்வு மட்டுமே சாலை விபத்துக்கு ஒரே தீர்வு என கூறி, பள்ளிக்கு அருகில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளார் அரசுப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி மாயாவதி.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிலுள்ள ஏத்தாப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவி மாயாவதி, தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவியை உருவாக்கி, அதனை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்து, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவி கூறியதாவது: பள்ளிகளுக்கு அருகாமையில் வேகத்தடைகள் அமைத்திருந்தாலும், வேகமாக வரும் வாகனங்களால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கிலும், விபத்துக்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், இக்கருவியை வடிவமைத்துள்ளேன். இந்த சாதனத்தில் ரேடியோ அலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வானொலி அதிர்வெண் கருவியை முதலில் பள்ளியில் பொருத்தி விட வேண்டும். இந்த அதிர்வெண்ணானது பள்ளியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு வேலை செய்யும்.

இந்த அதிர்வெண்ணை ரிசீவ் செய்யும் ரிசீவரை, வாகனங்களில் பொருத்துவது மிக மிக்கியம். வாகனங்கள் பள்ளிக்கு அருகில் வரும்போது, ரேடியோ ரிசீவரானது வேகத்தை பாதியாக குறைக்கிறது. இதனால், விபத்துக்களை தடுக்கலாம். ரேடியோ ரிசீவருடன் சென்சாரை பொருத்தி விட்டால், வேகமாக வரும் வாகனங்களின் குறுக்கே மாணவர்களோ அல்லது வேறு ஏதேனும் வந்தால், புற ஊதாக்கதிர் மூலம் இயங்கும் சென்சாரானது வாகனத்தின் வேகத்தை பாதியாக குறைக்கிறது. மேலும், என்ஜினை அணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முறையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தினால், பள்ளிகள் அருகே பெருமளவில் விபத்தை தடுக்கலாம். பள்ளிகள் மட்டுமன்றி விபத்துக்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும், இந்த கருவியை பயன்படுத்தினால் இழப்புகளை தடுக்கலாம். அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் கொடுத்த ஊக்கத்தாலும், பெற்றோர் இளவரசன், தேவி ஆகியோரின் ஆதரவாலும், இந்த கருவியை உருவாக்கியுள்ளேன். கண்காட்சியில் எனது கண்டுபிடிப்பை கண்டு வியந்து, சேலம் கலெக்டர் பாராட்டியது மகிழ்ச்சியான தருணம். இவ்வாறு நிறைவு செய்கிறார் மாயாவதி.

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு



1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது? தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா? உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா? இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்? 1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம். 2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம். 3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ். 4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ். 5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள். 6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள். 7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம். 8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ். இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு? காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது? காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்? காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா? அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா? தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா? கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள், தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா? திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்? கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். 1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்). 2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று. 3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.... Courtesy.. Gandharvakottai Shankar ganesh படித்ததில் பிடித்தது நன்றி வழக்கறிஞர் AD muthusamy

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை



அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக்கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பாடத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இதற்கென தனியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை.
பள்ளிகளில் பிற வகுப்பெடுக்கும் தமிழ்வழி கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே ஆங்கில வகுப்பும் எடுத்தனர். கடந்த 2013ம் ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வந்துவிட்டனர். இதுபோல் மற்ற கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகள் வந்துவிட்டனர்.

ஆனால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் மட்டும் இல்லை.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதல் பணிச்சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழி கல்வி வகுப்பறையிலேயே, ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பாடங்களை கற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது,’’ என்றார்.

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்!

பாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி

பாடம் சொல்லும் படிக்கட்டுகள்
தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி
திருநெல்வேலி, நெல்லை அருகே உள்ள அரசு பள்ளி, தனியாரை மிஞ்சு வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அசத்துகிறது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளி, 1940ல், துவங்கப்பட்டது. துவக்க பள்ளியாக இருந்து, காரியாண்டியைச் சேர்ந்த சமூக சேவகரும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினருமான பாண்டுரங்கன் மற்றும் புரவலர்களின் ஒத்துழைப்போடு, 2011ல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்தது.
உயர் நிலை பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்ட, பாண்டுரங்கன், 3.5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார். 240 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் காந்தி மற்றும் ஆசிரியர்கள், ரோட்டரி சங்கத்தின் துணையுடன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, பல்வேறு நவீன வசதிகளை, பள்ளியில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கம்ப்யூட்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், அரித்மெட்டிக் அல்ஜீப்ரா கணிதம், மாணவர்களுக்கு நீதி போதனை, யோகா, கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, ஆறாம் வகுப்புக்கு ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐந்தாண்டுகளாக, 10ம் வகுப்பு மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். படிக்கட்டுகளும் பாடம் சொல்லும் என்பதற்கேற்ப, பள்ளியின் படிக்கட்டுகளில் வாய்ப்பாடு எழுதப்பட்டுள்ளது.
பள்ளி முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளதுடன், வகுப்பறைகளில் ஸ்பீக்கர் பொருத்தப் பட்டு, அறிவிப்புகள் செய்யப் படுகின்றன. பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளும், காய்கறி செடிகளும் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் காய்கறிகளை, சத்துணவுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளியை தரம் உயர்த்தியதை அடுத்து, பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறும் முயற்சியில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதிய பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர்.

மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.