https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

புனவாசிப்பட்டி-ஊ.ஒ.தொ.பள்ளியில் - ஊர் கூடி தேர் இழுத்த -பள்ளி ஆண்டு விழா

ஊர் கூடி தேர் இழுத்த
-பள்ளி ஆண்டு விழா
கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம்ஒன்றியம்,புனவாசிப்பட்டி-ஊ.ஒ.தொ.பள்ளி





ஊர் கூடி தேர் இழுத்த -பள்ளி ஆண்டு விழா கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம்ஒன்றியம்,புனவாசிப்பட்டி-ஊ.ஒ.தொ.பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009, விழிப்புணர்வு ஆண்டுவிழா 01-03-2018 அன்று வெகு விமரிசையாக நடத்தப்பட்டது...
இவ்விழாவினை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.ராஜலிங்கம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார் .
பள்ளி தலைமை ஆசிரியை தருமதி.இரா.விஜயகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளி உதவி ஆசிரியை திருமதி.சி.சிவச்செல்வி அவர்கள் பள்ளி ஆண்டறிக்கை நிகழ்த்தினார்.
கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.குமுதா அவர்கள் , அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார மேற்பார்வையாளர் திருமதி.கவிதா அவர்கள், ஆசிரிய பயிற்றுநர் திரு.ரவிக்குமார் அவர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டுரை வழங்கினர்.
ஊர் நாட்டாமை,காரியக்காரர் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையாளர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பிற பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் , ஊர் பொதுமக்கள்,முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
பள்ளி் மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
விழா ஏற்பாட்டினை பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் ,முன்னாள் மாணவர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
பள்ளியின் உதவி ஆசிரியர் திரு.இரா.கோபிநாதன் அவர்கள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினர்.

No comments:

Post a Comment