https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு : 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு :
 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2வுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 4 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, ஏப்., 13 வரையிலும் தேர்வுகள் நடக்கின்றன. இத்தேர்வுகளில், நாடு முழுவதும், 11 ஆயிரத்து, 574 பள்ளிகளைச் சேர்ந்த, 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர். 10ம் வகுப்புக்கு, 1,564; பிளஸ் 2வுக்கு, 1,252 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பில், 6.71 லட்சம் மாணவியர் உட்பட, 16.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், ஐந்து மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 4.95 லட்சம் மாணவியர் உட்பட, 11.86 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மண்டலத்தில், 71 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், 15 ஆயிரத்து, 700 பேர், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

No comments:

Post a Comment