https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

பேராசிரியர் பணிக்கான தேர்வு : 41 ஆயிரம் பேர் பங்கேற்பு

பேராசிரியர் பணிக்கான தேர்வு :
41 ஆயிரம் பேர் பங்கேற்பு
சென்னை: பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் தேசிய தகுதி தேர்வான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில், தெரசா மகளிர் பல்கலை சார்பில், நேற்று மாநில அளவிலான, செட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 44 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.நேற்றைய தேர்வுக்கு, சென்னையில், 11 உட்பட, தமிழகம் முழுவதும், 54 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும், 41 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.'விரைவில், வினாத்தாளுக்கான தோராய விடைக்குறிப்பு வெளியிடப்படும். 'அதில், தேர்வர்களின் கருத்து கேட்கப்பட்டு, விடை குறிப்புகள் இறுதி செய்யப்படும். பின், விடைத்தாள் திருத்தம் துவங்கும்' என, பல்கலை பதிவாளரும், தேர்வு குழு உறுப்பினர் செயலருமான, பேராசிரியை, சுகந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment