ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இடமலைப்பட்டிபுதூரில் ......
01. 03 2018 மற்றும் 02.03.2018 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சியின் மூலம் மருத்து முகாம் நடைபெற்றது.. மருத்துவ முகாமிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியர் வரவேற்றார் .முகாமில் மருத்துவர் திரு ரா. அருண்பிரசாத் எம் .பி பி.எஸ் அவர்கள் மnணவ/மாணவிகளை பரிசோதனை செய்தார். ....................... “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடிவாய்ப்பச்செயல் என்ற வள்ளுவரின் மருத்துவ இலக்கணத்துக்கு இலக்கணமாய் நின்று பொறுமையுடன் குழந்தைகள் ஒவ்வொருவரையும் பரிசோதித்து , .உடனுக்குடன் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் குழந்தைகளின் பிரச்சனைகளைக் கூறி பெற்றோர் மற்றும் குழந்தைகளின் இதயம் கவர்ந்த மருத்துவர் ஆனார். அறிஞர் அண்ணா அவர்கள் “முகத்தில் புன்னகையும் , அகத்தில் நம்பிக்கையும் , செய்கையில் சுத்தமும் ,பணியில் நேர்மையும் சிந்தனையில் தன்னலம் கருதாத தன்மையுமிருந்தால், நாம் செய்யும் எந்த பணியும் மகிழ்வே “. என்று கூறி உள்ளார் . முகத்தில் புன்னகையுடன் தன்னுடையப்பணியை செவ்வனே செய்து , குழந்தைகள் பலரின் நோய்களுக்கு மருந்து, மாத்திரைகளையும் வழங்கிய மருத்துவர் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்
....நன்றி! திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் Dr.R.ARUNPRASAD MBBS medical officer Rbsk Trichy city Corporation
No comments:
Post a Comment