https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில் ஆண்டு விழா நடைபெற்றது

மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில்  ஆண்டு விழா நடைபெற்றது


திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில்  ஆண்டு விழா நடைபெற்றது .விழாவிற்கு மணிகண்டத்தின் மணிமகுடம் ஐயா கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்
 அவர்கள் தலைமை தாங்கினார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி இரா. தனலெட்சுமி அவர்கள் வரவேற்றார் .ஆண்டறிக்கையை திருமதி தாமரைச்செல்வி அவர்கள் வாசித்தார் .. கரகாட்டம். ஒயிலாட்டம் நாடகம் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. நிகழ்ச்சியினை திருமதி ரோஜாரமணிதோகுத்தளித்தார் .விழாவிற்கு மணிகண்டம் ஆசிரியர்கள் திரு ஆரோக்கியராஜ். திருமதி புஷ்பலதா  திருமதி வெற்றிமணி  திருமதி சாந்த லெட்சுமி திருமதி இந்திரா போன்றோர் கலந்துக்கொண்டனர் . இறுதியாக திருமதி கலைச்செல்வி நன்றி கூறினார் .

திருப்புட்குழி---ஊ.ஒ.தொ.பள்ளி

புதிய தொழில் நுட்பத்தில் புதிய வடிவில்
பாடங்கள் அனைத்தும்...
 
  அடுத்த கல்வி ஆண்டிற்கான டிஜிட்டல் வழி பாடங்கள்
5ஆம் வகுப்பிற்கு தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது.
என்றும் மாணவர் நலனில்
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி

Pennadam-West. Nallur Block, Cuddalore District.

P.U.M.School
 Pennadam-West. Nallur Block,
 Cuddalore District.
 

நாம் தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...!
என்று என் மாணவ செல்வங்கள் உணர்ந்த தருணம்!!!
ஆம்!!!
ஆய்வு சொல்லுதப்பா !!
நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை

இடைமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில், கன்மலை அறக்கட்டளை நடத்திய உலகப்பணதாள்கள் மற்றும் நாணயக்கண்காட்சி -2018

உலகப்பணதாள்கள் மற்றும் நாணயக்கண்காட்சி ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூரில்-2018...
“நாணயங்கள் என்பவை உலகைச்சுற்றிவரும்  வாலில்லாப்
பறவைகள்”. என்பது வேடிக்கையான வார்த்தைகள். ஆனால் அது தான் உண்மை ....உலகநாடுகள் அனைத்தும் தங்களுக்கென்று தனித்தனியாக  நாணயங்களை கொண்டிருக்கின்றன ............
செல்லாக்காசுகள்  என்று பிறரால் எள்ளிநகையாடப்படும்  நாணயங்கள்  இன்று நாணய சேகரிப்பாளர்களின்  செல்லப்பிள்ளையாய் அவர்தம் சேமிப்பில் சிரித்துக்கொண்டு இருக்கின்றன....நாணயங்கள்  என்பவை வரலாற்றைச்சொல்லித்தர உதவும் வற்றாதவளங்கள் என்றால் அது மிகையில்லை ..நாணயச்சேகரிப்பின் மூலம் நாம் பல்வேறு தலைவர்களின் வரலாறு முதல் எண்ணிலடங்கா பல அரிய தகவல்களையும்  அறிந்துகொள்ள முடிகிறது ....
ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூரில் ,    கன்மலை அறக்கட்டளை நடத்திய உலகப்பணதாள்கள் மற்றும் நாணயக்கண்காட்சி -2018...
24-03-18. காலை 10.00 மணி. முதல் 2.00 மணி வரை நடைப்பெற்றது. இக்கண்காட்சியை 300 பள்ளி மாணவர்கள் மற்றும் 75 ஆசிரியர்கள் கண்டுகளித்தனர் .நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தி.முத்துசெல்வம் அவர்கள் (முன்னாள் கல்வி குழு தலைவர் . ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி)கலந்துக்கொண்டார் .நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யோகா விஜய் ,சிலம்பம் கார்த்திக் , பூபேஸ் ,ஆனந்த் , பிரேம் ,சந்தியா ,ஸ்டீவ் வாட்சன்ஆகியோர் கலந்துக்கொண்டனர் ...........நன்றி கன்மலை எடிசன்

🔥🔥*BIG BREAKING*🔥🔥 💥*PUPS- KOMATTERY*💥

🔥🔥*BIG BREAKING*🔥🔥
💥*PUPS- KOMATTERY*💥

KARUR DISTRICT, KRISHNARAYAPURAM BLOCK ,PUPS KOMATTERY
Pleasure to  with u all  today(26-03-2018) we celebrated   inaugural ceremony of smart class room in our school. *Honourable A.A.E.E.O* inaguarted smart class room .Beloved BRTE and many more officials participated. Respected Head Master *Mrs.Janadha* welcomed officials, parents and students.Walwhan Renewable Energy  Ltd donated us smart class room which cost around 1,50,000.. Hearty thanks to Walwhan Renewable  Energy Ltd . Finally Teacher *Mr.Palanisamy* given vote of thanks to all the participants.

காவாந்தண்டலம், காஞ்சிபுரம் ஒன்றியம்- ஆசிரியர் திரு சரவணன் அவர்கள்

காவாந்தண்டலம், காஞ்சிபுரம் ஒன்றியம்-
ஆசிரியர் திரு சரவணன் அவர்கள்


ஓர் அரசு பள்ளி ஆசிரியர் நினைத்தால் தன் பள்ளி எந்த நிலையில் இருந்தாலும் மிக சிறந்த இடத்திற்கு கொண்டுவர முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் எங்கள் காஞ்சிபுரம் ஒன்றியம் காவாந்தண்டலம் ஆசிரியர் திரு சரவணன் அவர்கள். பேருந்து வசதியே குறைவாக உள்ள தன் கிராமபுற பள்ளி குழந்தைகளும் கணினி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தன் மோதிரத்தையும் அடகு வைத்து எவ்வளவோ சிரமங்களை கடந்து இன்று தன் வகுப்பில் கணினி வழி கல்வியை கொண்டுவந்துள்ளார்

அவரின் முயற்சியை கண்ட த.ஆசிரியர் தன்னுடைய பங்கும் இதில் இருக்க வேண்டும் என்று கூறி தன்னால் இயன்ற உதவிகளை செய்து அவரை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த வகுப்பறையானது முன்னர் பார்க்கும் போது நாங்கள் பார்த்தவிதம் வேறு. ஆனால் இப்போது அங்கேயே சென்று பணிபுரியவேண்டும் போல் உள்ளது. மாற்றம் என்பது முதலில் ஆசிரியருக்கு வேண்டும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.
தன்னால் முயன்றவரை தன் வகுப்புக்கும் தன் பள்ளிக்கும் அந்த குழந்தைகளுக்கும் முடிந்த மாற்றங்களை செய்து மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குவேன் என்று அவர் கூறும் போது மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த ஆசிரியருக்கும் அவருக்கு ஊக்கம் அளித்து என்றும் துணையாக இருக்கும் அவர் தலைமை ஆசிரயருக்கு
வாழ்த்துக்கள்.

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை 

நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார்.

 

அரவட்லா - ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா - 2018

அரவட்லா - ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா - 2018

 

எந்த தனியார் பள்ளிகளில் நடக்காத நடத்த முடியாத நிகழ்வு
நம் அரசு பள்ளிகளில் மட்டுமே நடக்கும்.

காசை கொடுத்து கடைக்கோடியில் அமர்ந்து பார்க்கும் அவலம் - தனியார் ...

பெற்றோரே தம் பிள்ளைகளை அலங்கரித்து VIP யாய் வலம் வந்து முன் வரிசையில் தாத்தா,பாட்டி, மாமா,அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, அக்கா, அண்ணன், அக்கம் பக்கம் வீட்டார் என சூழ பாராட்டி மகிழ்வது நம் அரசு பள்ளியில் மட்டுமே ச(சா)த்தியம்
பெருமிதம் கொள்வோம்......

மாணவர் சேர்க்கை விழா-இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

மாணவர் சேர்க்கை விழா-இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

 
எங்கள் பள்ளிஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா , பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா 16/03/2018  வெள்ளிக்கிழமை  மாலை 2.30 மணி அளவில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது .வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து, கிரீடம் அணிவித்து  பேண்டு வாத்தியங்கள் முழங்க அவர்களை பெற்றோர்கள் ஊர்பொது மக்கள்  ஊர்வலமாக அழைத்து வந்தனர் .ஊர்வலமாக வந்த பொதுமக்களையும் மாலைஅணிவித்து வரும் குழந்தைகளையும் பள்ளி வாசலில் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து விழா மேடைக்கு அழைத்துச்சென்றனர் .விழா மேடையில் பெற்றோர்கள் அவர்களுக்கு சந்தனம் தடவி பொட்டு வைத்தனர்.மணிகண்டம் கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஐயா மருத நாயகம் அவர்களை வாழ்த்தி பேசினார் ..மேடையில் அவர்களுக்குபுத்தகப்பை , சிலேட்டு ,  வழங்கப்பட்டது ...40 குழந்தைகள் இந்த கல்வி ஆண்டில் பள்ளியில் சேர உறுதி செய்யப்பட்டது .....

இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , இடை மலைப்பட்டி புதூர் பள்ளியில் 16.03.2018 வெள்ளிக்கிழமை 2.30 மணி அளவில் பள்ளிக்கு சிர் வரிசை வழங்கும் விழா . மாணவர் சேர்க்கை விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

பன்னாட்டுப் பள்ளிகளும் கன்னத்தில் கைவைக்கும்
எம் கண்மணிகளின் நடனம் கண்டு
ஆடல் வல்லானும் அசந்து போவார்கள் எம் அரும்புகளின் ஆட்டம்கண்டு
எம் தளிர்களின் நடனத்தோடு எந்தத் தனியார் பள்ளியும் போட்டி போட முடியாது.

அடடா என்ன ஆட்டம்.?என்ன ஆட்டம் ?என எண்ணிப்பார்க்கவைக்கும் நடனம்.....ஆண்டு விழாவில் அசத்திய வரவேற்பு  நடனம் ...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , இடை மலைப்பட்டி புதூர் பள்ளியில் 16.03.2018 வெள்ளிக்கிழமை 2.30 மணி அளவில் பள்ளிக்கு சிர் வரிசை வழங்கும் விழா . மாணவர் சேர்க்கை விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.விழா தலைமை மணிகண்டம் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மருதநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்..
வரவேற்புரை எம் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். திருமதி ராஜஷுலா அவர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு கலியமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் , கி.ஆ.பெ.விசுவநாதன் கல்லூரி முதல்வர் திருமதி அனிதா அவர்கள் சிறப்புரை வழங்கினார்..




சென்னை சிறு துளி சார்பில் பள்ளிக்கு பத்து மரம்

சென்னை சிறு துளி சார்பில் பள்ளிக்கு பத்து மரம்

சிறுதுளி ஜெயாவெங்கட்பசுமை இந்தியா நாகராஜன்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா 10-3-18 அன்று நடைப்பெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.
பேர்ணாம்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜார்ஜ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

முன்னாள் மாணவர் மற்றும் சமூக சேவையாளர் பாஸ்கரன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்கள் ஆசிரிய பயிற்றுனர் நாகராஜ், வனக்குழு தலைவர் லோகநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோவிந்தன், ஊராட்சி மன்ற செயலாளர் லதா, நாட்டாண்மை பிரபாகரன், நாட்றம்பள்ளி ஆசிரியர் அருண், காவேரிபாக்கம் தலைமை ஆசிரியர் லதா, கிரீன்வேல்யு பள்ளி தாளாளர் ஆயிஷாபேகம், ZTV தயாரிப்பாளர் பாலமுருகன், PR.சுப்பிரமணி News 7 & media செய்தியாளர் முகம்மத் பிலால் தினகரன் செய்தியாளர் ஹேம் பிரசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இப்பள்ளி ஆங்கில வழி பள்ளியாக இரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து வருகிறது.
இப்பள்ளியில் Projetor வழியாக மெட்ரிக்,CBSE பள்ளிகள் போல் பாடங்கள் கற்று கொடுக்கப்படுகிறது.
அதே போல் யோகா, கம்யூட்டர் கல்வி, நூலக வசதி, தொலைக்காட்சி வழி கல்வி, தரமான மதிய உணவு வைபை மூலம் இதர பள்ளி மாணவரோடு கலந்துரையாடல், நேரிடை அனுபவக் கல்வி என சிறப்பான வசதிகளை உள்ளடக்திய பள்ளியாக திகழ்கிறது.
பள்ளி விழாவில் பரதம், கிராமிய பாடலுக்கான ஆடல், பாடல், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், நாடகங்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் ஆடல் நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
விழாவினை ஆசிரியர்கள் ரேவதி, ரேணுகா ஒருங்கிணைத்தனர்.
முடிவில் ஆசிரியர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

நல்லூர் ஒன்றிய பள்ளி - கருணை உண்டியல் திட்டம்

PANCHAYAT UNION PRIMARY SCHOOL Periyanesalur post Nallur block Veppur Tk Cudalore Dt


"அறம் செய விரும்பு" 
இன்று எங்கள் பள்ளியில்" கருணை உண்டியல் திட்டம் " தொடங்கியுள்ளோம்.
இதன் மூலம் மாணவர்களுக்கு, 
உதவும் மனப்பான்மை 
சேமிக்கும் பழக்கம் 
பணத்தை சரியான முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை வளர்த்தல்.
முதலில் நான் மாணவர்கள் முன் நூறு ரூபாய் பணம் கருணை உண்டியலில் போட்டேன், உதவி செய்தோரே உயர்ந்தவர் எனவும், உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கூறினேன்.
மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உதவுவதாக கூறினார்கள். மாணவர்கள் அனைவருக்கும் காசு கொடுத்து கருணை உண்டியலில் அவர்கள் கையாலே போடச்சொன்னேன் மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி...

R.PADMAASRRI Teacher PANCHAYAT UNION PRIMARY SCHOOL Periyanesalur post Nallur black Veppur Tk Cudalore Dt Pin 606304

பெண் Queen - 2018 இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியை திருமதி.லதா பாலாஜி

இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியை  திருமதி.லதா பாலாஜி 

மாணவ/மாணவியரின் மனதை கொள்ளை கொண்ட ஆசிரியர் ......சலிக்காத உழைப்புக்கும் ,நல்ல சிந்தனைக்கும் சொந்தக்காரர் .
பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுபவர். 
சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக வளைய வருபவர் ..பிள்ளைகளின் தன்னம்பிக்கையை பலப்படுத்தி ,பன்முக திறமைகளை மெருகேற்றி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துபவர். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து ,வெற்றி பெற வைத்து சாதனைகளை படைக்கச்செய்வதில் முக்கிய காரணமாக இருப்பவர்.
சூரிய பெண்மணி விருது பெற்றதில், விருதிற்கே பெருமை சேர்த்த சாதனைச்சகோதரி மென்மேலும் விருதுகளை குவித்து ,தன் அர்பணிப்பான கல்விப்பணியை தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன் ..நலமுடன் .... சாதனைப்பயணம் தொடரட்டும்.....