https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

Pennadam-West. Nallur Block, Cuddalore District.

P.U.M.School
 Pennadam-West. Nallur Block,
 Cuddalore District.
 

நாம் தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...!
என்று என் மாணவ செல்வங்கள் உணர்ந்த தருணம்!!!
ஆம்!!!
ஆய்வு சொல்லுதப்பா !!
நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை


மாண்டுப் போகும்.
ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும். !!
அத்தனை நதிகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.!
புனிதமாய் வாழ்ந்தாலும்
புற்றுநோய் முற்றிவிடுமாம்.!!
தீவனமில்லா ஏழை கால்நடைகள்
தினம் தின்றுமடிகிறது
பாலிதீன் பைகளை
காகிதமென்று எண்ணி....
நெகிழி நம் தேசத்தின்
வற்றா மடுகளில் ரத்தம்
உறிஞ்சுமொரு உன்னி.
கால்நடை இறப்புக்கும்
சாக்கடை அடைப்புக்கும்
காரணமிந்த நெகிழி !!
மூச்சு திணறுதப்பா பூமிக்கு - அவள்
முந்தியில் பிறந்த
சந்ததிகள் நாமொரு
முடிவெடுக்க வேண்டாமா?
என்று என் மாணவர்களுடன்
விவாதித்தேன்!!!
முதற்கட்டமாக துணிப்பைகள் என் மாணவர்களுக்கு
வாங்கி கொடுத்தேன்.
காய்கறிகளோ சின்ன சின்ன பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும் போதெல்லாம் இதனை எடுத்து செல்லுங்கள்!!
நம்மால் முடிந்த அளவிற்கு
நெகிழிப்பைகள் பயன்படுத்தாமல் இருந்து
நம் தேசத்தை காப்போம்!
என்னும் புரிதலையும் என் மாணவர்களுக்கு ஏற்படுத்தினேன்!!!

பாலிதீன் பை - எமனின்
பாசக் கயிறு போல ___
தவிர்த்திடுவோம்!!
இனிநம் தலைமுறைகள்
உயிர் வாழ !! என்ற உறுதிமொழியோடு எங்கள் பயணங்கள் முடிவதில்லை!!!
P.U.M.School, Pennadam-West.
Nallur Block, Cuddalore District.

No comments:

Post a Comment