சிறாருக்கு புகையிலை விற்பனை :
அரசு தடுக்க தவறியதாக புகார்
சென்னை: 'சிறுவர்களை மையப்படுத்தி நடக்கும் புகையிலை விற்பனையை, தமிழக அரசு தடுக்கவில்லை' என, இந்திய நுகர்வோர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.இது குறித்து, நுகர்வோர் சங்கத்தின் சென்னை அலுவலர், சோமசுந்தரம் கூறியதாவது:உலகளவில், புகையிலை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும், இரண்டாவது இடத்தில், இந்தியா உள்ளது.
புகையிலையை பயன்படுத்துவதால், ஆண்டுக்கு, 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.தமிழகத்தில், 35 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்துகின்றனர். இதில், 60 சதவீதம் ஆண்கள், 40 சதவீதம் பெண்கள். ஒவ்வொரு ஆண்டும், புதிதாக, 23.3 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்த துவங்கி உள்ளனர். மேலும், 13 - 15 வயது வரை, 20 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்துகின்றனர்.பள்ளி, கல்லுாரிகள் அருகே, புகையிலை விற்பனையை தடுக்கும், மத்திய அரசின், 2003ம் ஆண்டு சட்டத்தை, கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன. தமிழகம் போன்ற மாநிலங்கள்பின்பற்றவில்லை.மேலும், புகையிலை விற்பனை செய்யப்படும் கடைகள் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. குறிப்பாக, சிறுவர்களை மையப்படுத்தி புகையிலை விற்பனை செய்யப்படுவதை, அரசு தடுக்கவில்லை. இதனால், புகையிலை பயன்பாடு அதிகரிக்கிறது. இது, புற்று நோய்க்கு வழிவகுக்கும் என்பதால், இனியாவது, தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment