https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

காவேரிபாக்கம் பள்ளி : புதுமை பள்ளி: மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு திட்டம்

 புதுமை பள்ளி: காவேரிபாக்கம் பள்ளி 
மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு திட்டம்
காவேரிபாக்கம் பள்ளி : புதுமை பள்ளி: மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு திட்டம்


சிறப்பு விருந்தினர் திரு. ரவி சொக்கலிங்கம் ஐயா!!! பள்ளிக்கு வருகை....
மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு திட்டம், சுட்டி விகடன் வழங்கும்...திட்டம் அறிவித்தல்.....
இவற்றை பற்றிய இன்றைய பத்திரிகை செய்தி....
நன்றி :ரவி சொக்கலிங்கம் ஐயா!!!
நன்றி: இள.ஹரிஹரன் தம்பி!!!!

Pums Kothavasal: புதுமைபள்ளி - Karka math lab எனும் கணித ஆய்வக திறப்புவிழா நடைபெற்றது

புதுமைபள்ளி : 
Pums Kothavasal:   Karka math lab 
எனும் கணித ஆய்வக திறப்புவிழா நடைபெற்றது
Pums Kothavasal: புதுமைபள்ளி -
Karka math lab எனும் கணித ஆய்வக திறப்புவிழா நடைபெற்றது

28.02.2018  காலை 10 மணியளவில் கொத்தவாசல் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் சென்னை Altius foundation தொண்டு நிறுவனம் மூலம் Karka math lab எனும் கணித ஆய்வக திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் திரு சோ.இளங்கோவன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவிகள் மகேஸ்வரி மற்றும் சண்முகபிரியா வரவேற்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய தகவல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியர் டாக்டர் ஆசிர் ஜூலியஸ் அவர்கள் karka math lab ஐ தொடங்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக Altius foundation நிறுவனர் ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமதி ரோஸ்நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவிற்க்கான ஏற்பாடுகளை Altius foundation தொண்டு நிறுவன அலுவலர்கள் கிருத்திவாசன், மகேஸ்,சந்தியா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் இளவழகன், 
அலுவலர்கள் கிருத்திவாசன், மகேஸ்,சந்தியா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் இளவழகன், இளமதி,முத்துக்குமார், ஜெயந்தி,லதா,செல்வகுமார் முதலானோர் செய்திருந்தனர். ஆலத்தூர் ஒன்றியம், நொச்சிக்குளம் பள்ளி தலைமையாசிரியர் ஈ.இராஜேந்திரன், வேப்பூர் ஒன்றியம் ஒதியம் பள்ளியின் தலைமையாசிரியர் ந.மணிவண்ணன், கல்லை பள்ளியின் தலைமையாசிரியர் பெ.அன்பழகன், கணித பட்டதாரி ஆசிரியர் காமராஜ்,, ஓலைப்பாடி பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் இராமநாதன், இடையத்தான்குடி பட்டதாரி ஆசிரியர் எமல்டா குயின்மேரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.இந்த ஆய்வகம் மூலம் கணினி வழியே மாணவர்கள் எளிதாக கணித பாடத்தினை கற்கும் வண்ணமும், விளையாட்டு முறையில் கற்கும் வண்ணமும் software உருவாகப்பட்டுள்ளதால் விளிம்பு நிலை மாணவணும் எளிதில் இனிமையாக கணிதம் கற்க முடியும். மேலும் பரதம், கராத்தே, சிலம்பம் முதலான பயிற்சி வகுப்புகளும் இன்று துவங்கபட்டது.

தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுதல்..

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி: புதுமை பள்ளி : அஞ்சல் அட்டை தயாரித்தல் போட்டி

புதுமை பள்ளி :  திருச்சி மணிகண்டம் ஒன்றியம் இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி:
அஞ்சல் அட்டை தயாரித்தல் போட்டி


அஞ்சல் அட்டையில்
அழகாய் படம் வரைந்து
மஞ்சள் பொட்டிட்டு
மங்களமாய் அனுப்பும் காலம்
மலையேறிப் போனதென
மனதில் நொந்திருந்தோம்.
மரபதனை மீட்டெடுக்க,
மாணவரின் திறன் வளர்க்க என


ஒரே கல்லில் இருமாங்காய்!
உதிர்ந்திடச் செய்தல்போல
செயல்ஒன்றை முன்னெடுத்தார்
சென்னை சிறுதுளியின்
ஜெயா வெங்கட் அவர்கள்.
பிள்ளைகள் படம் வரைந்து
பிரியமுடன் வாழ்த்து எழுதி
பள்ளிகளுக்குள் பகிர்ந்தனுப்பிப்
பாசத்தை வெளிப்படுத்த
அதிலேச் சிறந்த மூன்றுக்கு
அளிக்கின்றார் பரிசுகளை
தங்கம் வெள்ளி தாமிரம் என
தரமான மூன்று பதக்கங்கள்
தங்கங்களாம் மாணவர்க்கு தந்தே அழகுபார்க்கும் எங்களன்பு இளவல்
ஜெயா வெங்கட்டிற்கும் 
சீரியபணியைச் சிரம்தாங்கிச் செய்யும் சிறுதுளிக்கும் நன்றி!நன்றி!! விருதாக வந்த பதக்கங்களை
வெற்றிபெற்ற மாணவர்க்கு
தன் பொற்கரத்தால் அணிவித்து அழகுபார்த்த ஐயா !மருதநாயகம் 
எம் ஒன்றியத்தின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் நன்றி! நன்றி ! உயர் நல் உள்ளங்கள் உவந்தளித்தப் பதக்கங்களை
உரியவர்க்கு அணிவித்தார் கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஐயா அவர்கள்!!!

ஆசிரியை - திருமதி . லதா பாலாஜி
முகநூல் பக்கத்திலிருந்து... நன்றி

தமிழ்நாடு துறைத்தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு துறைத்தேர்வு அறிவிப்பு

மாணவர்களுக்கு '104'ல் மனநல ஆலோசனை

மாணவர்களுக்கு '104'ல்
மனநல ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்குவதை அடுத்து, '104' மருத்துவ சேவையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சேவை மைய அலுவலர் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, உளவியல் நிபுணர்கள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பணியாற்றுவர். மாணவர்கள், 24 மணி நேரமும், ஆலோசனைகள் பெறலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை, ஆலோசனைகள் வழங்கப்படும். பெற்றோருக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி கல்வித்துறையின் சார்பில், 14417 என்ற எண்ணிலும், இலவச உளவியல் ஆலோசனைகளை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், பொது தேர்வில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தேர்வின் நடைமுறை தொடர்பான சந்தேகங்களை தீர்க்க, குறைதீர் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான, தொலைபேசி எண்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது, கூடுதலாக நான்கு தொலைபேசி எண்களை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி நேற்று அறிவித்தார். பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் தங்கள் குறைகளை, 93854 94105, 93854 94115, 93854 94120 மற்றும், 93854 94125 ஆகிய, தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம் என, கூறியுள்ளார்.

வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'



சென்னை: ''வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
டில்லியை அடுத்த சண்டிகர் மருத்துவ கல்லுாரியில், பட்ட மேற்படிப்பு படித்து வந்த, தமிழகத்தை சேர்ந்த, டாக்டர் கிருஷ்ண பிரசாத், 24, தங்கியிருந்த விடுதியில், மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். இது, சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.இதேபோல, 2017ல், டில்லியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த, திருப்பூரை சேர்ந்த, இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். முதலில், தற்கொலை என, வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், 'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரி மாணவர், சரவணனின் வழக்கு, மர்ம மரணம் என, மாற்றப்பட்டது. வெளி மாநிலங்களில் படிக்கும், தமிழக மாணவர்கள், மர்மமான முறையில் இறப்பது தொடர்கிறது.இது குறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:மாணவர் இறப்பு, துயரத்தை ஏற்படுத்திஉள்ளது. சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த மாநில மருத்துவ கல்வி இயக்குனரிடம், தொலைபேசியில் பேசினேன். மாணவர் இறப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தவும், அவரது உடலை, தமிழகம் கொண்டு வர உதவும்படியும் கோரியுள்ளேன். தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளும், அவரது பெற்றோருடன் சென்றுள்ளனர்.முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின், மன அழுத்தத்தை குறைப்பது குறித்தும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள், அங்கே சந்திக்கும் சவால்களை எப்படி அணுகுவது என்பது குறித்தும், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில், 'கவுன்சிலிங்' நடத்தப்படும். மேலும், மூத்த பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். குடும்பத்திற்கு அரசு நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கிருஷ்ண பிரசாத். இவர், ஹரியானா மாநிலம், சண்டிகரில் உள்ள, நேரு மருத்துவ கல்லுாரியில், முதுநிலை ஆராய்ச்சி படிப்பில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், மருத்துவ கல்லுாரி விடுதியில், துாக்கிட்டு இறந்தார்.இதையறிந்த முதல்வர் பழனிசாமி, அவரது உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வர, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாணவனின் குடும்ப சூழ்நிலையை கருதி, அவரது குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண
நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சிறாருக்கு புகையிலை விற்பனை : அரசு தடுக்க தவறியதாக புகார்

சிறாருக்கு புகையிலை விற்பனை : 

அரசு தடுக்க தவறியதாக புகார்

சென்னை: 'சிறுவர்களை மையப்படுத்தி நடக்கும் புகையிலை விற்பனையை, தமிழக அரசு தடுக்கவில்லை' என, இந்திய நுகர்வோர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.இது குறித்து, நுகர்வோர் சங்கத்தின் சென்னை அலுவலர், சோமசுந்தரம் கூறியதாவது:உலகளவில், புகையிலை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும், இரண்டாவது இடத்தில், இந்தியா உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதால், ஆண்டுக்கு, 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.தமிழகத்தில், 35 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்துகின்றனர். இதில், 60 சதவீதம் ஆண்கள், 40 சதவீதம் பெண்கள். ஒவ்வொரு ஆண்டும், புதிதாக, 23.3 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்த துவங்கி உள்ளனர். மேலும், 13 - 15 வயது வரை, 20 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்துகின்றனர்.பள்ளி, கல்லுாரிகள் அருகே, புகையிலை விற்பனையை தடுக்கும், மத்திய அரசின், 2003ம் ஆண்டு சட்டத்தை, கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன. தமிழகம் போன்ற மாநிலங்கள்பின்பற்றவில்லை.மேலும், புகையிலை விற்பனை செய்யப்படும் கடைகள் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. குறிப்பாக, சிறுவர்களை மையப்படுத்தி புகையிலை விற்பனை செய்யப்படுவதை, அரசு தடுக்கவில்லை. இதனால், புகையிலை பயன்பாடு அதிகரிக்கிறது. இது, புற்று நோய்க்கு வழிவகுக்கும் என்பதால், இனியாவது, தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

'அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. அதில், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி பேசியதாவது:அனைத்து கல்வி மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மாணவர் எண்ணிக்கை மற்றும் பதிவேடுகளை, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தினமும், அரசு குறிப்பிட்ட நேரத்தில், ஆசிரியர்கள், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு துவங்கும் முன், பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உதவியுடன், பள்ளி செல்லா குழந்தை களை, அடையாளம் காண வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.பள்ளிகளில், சரியான மாணவர் எண்ணிக்கையை மட்டும், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்; போலி பதிவுகள் இருக்க கூடாது. பள்ளிக்கு வராமல், வேலை நேரத்தில் வேறு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை, அரசு கவுரப்படுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக "கிராமங்கள் பட்டியல்" தயாரிக்க உத்தரவு.!!!

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக "கிராமங்கள் பட்டியல்" தயாரிக்க உத்தரவு.!!!

அரசுப் பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை -கேள்விக் குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!

அரசுப் பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை -கேள்விக் குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!

சத்துணவு குழந்தைகள் விலகல்-பணி பாதுகாப்பு கேள்விக்குறி?

சத்துணவு குழந்தைகள் விலகல்-பணி பாதுகாப்பு கேள்விக்குறி?

TN-Schools MID DAY Meals- Android APP

TN-Schools MID DAY Meals- Android APP



தமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் தினந்தோறும் தங்களது பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களது எண்ணிக்கையினை குறுஞ்செய்தியாக ( SMS )  அப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.

இதனை எளிமைப்படுத்தும் விதத்தில் Mid Day Meal - Tamilnadu என்ற செயலியினைதங்களது மொபைல் போனில் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து play store -ல் இலவசமாக Download செய்து பயன்படுத்தவும்.

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைநபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணிணி மயமாக்கப்படும் என்றார்

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது துணையாளரை அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது துணையாளரை அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்

SSA- ONE DAY SMC TRAINING - SPD PROC

*டி.இ.இ.ஓ. பதவி ஒழிப்பு: தமிழக அரசு முடிவு *4 ஒன்றியங்களுக்கு ஒரு DEO நியமனம். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முழு அதிகாரம்!!!

*டி.இ.இ.ஓ. பதவி ஒழிப்பு: தமிழக அரசு முடிவு *4 ஒன்றியங்களுக்கு ஒரு DEO நியமனம். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முழு அதிகாரம்!!!

பள்ளிக்கல்வி - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'

ஈரோடு: ''மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், காராப்பாடியில், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் துவங்கவுள்ளது. பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிடவும், மேல்நிலை படிப்புக்கு பின், எந்த கல்லுாரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, 'ஹெல்ப்லைன்' வசதி விரைவில் துவக்கப்படும். மாணவர்களின் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்கவும், 'சிநேகா' என்ற தொண்டு நிறுவனத்துடன், கல்வித்துறை இணைந்து, மாணவர்களின் வீட்டிற்கே சென்று, 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவுக்கு குக்கர்

சத்துணவுக்கு குக்கர்

தமிழகத்தில் 19 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு தலா 2,500 ரூபாய் மதிப்பிலான குக்கர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு குறைவாக சத்துணவு அருந்தும் 19 ஆயிரம் மையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் இவை வழங்கப்படும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!

Primary School Education Site TERM 3 3rd Std English Book Back Q&A

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்:
மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து தேர்வெழுதும் மாணவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்வுத் துறை விதித்துள்ளது. அதன் விவரம்: தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் பக்க எண்ணிக்கையை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத் தாளின் முகப்பு பக்கத்தில் புகைப்படம், பெயர் ஆகியவை தங்களுடையதுதானா என்றும், தேர்வு எழுத உள்ள பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். தேர்வுக் கூடத்துக்கு துண்டுச் சீட்டுகள் எடுத்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு: மாணவர்கள் தேர்வு எழுதும் போது விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தமது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது. கூடுதல் விடைத்தாள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்களில் எழுதுவதற்கு முன்னதாக கூடுதல் விடைத் தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள் அந்தந்த பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர "ஓவர் சாய்சில்' எழுதிய விடைகளைக் கோடிட்டு அடித்தால், அந்த விடை தன்னால் எழுதப்பட்டது என்று குறிப்பு எழுத வேண்டும். அதில் அறைக் காணிப்பாளர் கையொப்பம் இடக்கூடாது. மேலும் மாணவர்கள் வராத இடத்தில் வேறு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதக் கூடாது.

தேர்வு அறைக்குள் நுழையும் முன்பே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபார்த்து காலணி, பெல்ட் ஆகியவற்றை வெளியில் விட்டுவிட்டு இருக்கையில் சென்று அமர வேண்டும். தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தாங்கள் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில விடைகளையோ தாமே அடித்து விட்டால் அது ஒழுங்கீனச் செயலாக கருதப்படும். விடைத் தாளில் விடைகள் எழுதி முடித்த பிறகும் மீதம் உள்ள வெற்றுப் பக்கங்களில் குறுக்கே கோடிட வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகள் தேர்வுத் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆசிரியரின்றி இயங்கும் ஆங்கிலவழி பள்ளிகள்...

தமிழகம் முழுவதும் ஆசிரியரின்றி இயங்கும் ஆங்கிலவழி பள்ளிகள்...

ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...!

நீங்க இத மட்டும் செய்யுங்க...! உங்க விஷயத்துல நாங்க தலையிடமாட்டோம்...! ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...!

கடந்த 21 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்லவும் முயன்றனர். இதனையடுத்து பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வேலை செய்யும் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினால் ஹைகோர்ட் தலையிடாது எனவும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை...! முடிவுக்கு வருமா ஜாக்டோ ஜியோ போராட்டம்...?

இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை...! முடிவுக்கு வருமா ஜாக்டோ ஜியோ போராட்டம்...?



பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு இதுவரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்

பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்


குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'நிடி ஆயோக்' வெளியிட்ட சுகாதார குறியீட்டில், கேரள மாநிலம், நாட்டிலேயே முதலிடத்தை பெற்றது. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும், சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், புதிய சுகாதார கொள்கையை அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

திட்டக் குழு உறுப்பினரும், கேரள பல்கலையின் முன்னாள் துணைவேந்தருமான, இக்பால் தலைமையில், 17 பேர் அடங்கிய கமிட்டியின், புதிய சுகாதார கொள்கைக்கு, முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டது.இதன்படி, பள்ளிகளில், முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும் போது, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளுக்கேற்ற வகையில், சுகாதாரமான கழிப்பறைகள் அமைத்தல்; பெண்கள் படிக்கும் பள்ளி களில், சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் அகற்றும் இயந்திரங்களை பொருத்துதல் உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி

பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி


அதிக விபத்துகள் நிகழும் நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விபத்தில்லா பயணம் மேற்கொள்வது சவாலாக உள்ளதுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேற்கொண்டாலே, விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனி மனித விழிப்புணர்வு மட்டுமே சாலை விபத்துக்கு ஒரே தீர்வு என கூறி, பள்ளிக்கு அருகில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளார் அரசுப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி மாயாவதி.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிலுள்ள ஏத்தாப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவி மாயாவதி, தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவியை உருவாக்கி, அதனை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்து, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவி கூறியதாவது: பள்ளிகளுக்கு அருகாமையில் வேகத்தடைகள் அமைத்திருந்தாலும், வேகமாக வரும் வாகனங்களால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கிலும், விபத்துக்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், இக்கருவியை வடிவமைத்துள்ளேன். இந்த சாதனத்தில் ரேடியோ அலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வானொலி அதிர்வெண் கருவியை முதலில் பள்ளியில் பொருத்தி விட வேண்டும். இந்த அதிர்வெண்ணானது பள்ளியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு வேலை செய்யும்.

இந்த அதிர்வெண்ணை ரிசீவ் செய்யும் ரிசீவரை, வாகனங்களில் பொருத்துவது மிக மிக்கியம். வாகனங்கள் பள்ளிக்கு அருகில் வரும்போது, ரேடியோ ரிசீவரானது வேகத்தை பாதியாக குறைக்கிறது. இதனால், விபத்துக்களை தடுக்கலாம். ரேடியோ ரிசீவருடன் சென்சாரை பொருத்தி விட்டால், வேகமாக வரும் வாகனங்களின் குறுக்கே மாணவர்களோ அல்லது வேறு ஏதேனும் வந்தால், புற ஊதாக்கதிர் மூலம் இயங்கும் சென்சாரானது வாகனத்தின் வேகத்தை பாதியாக குறைக்கிறது. மேலும், என்ஜினை அணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முறையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தினால், பள்ளிகள் அருகே பெருமளவில் விபத்தை தடுக்கலாம். பள்ளிகள் மட்டுமன்றி விபத்துக்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும், இந்த கருவியை பயன்படுத்தினால் இழப்புகளை தடுக்கலாம். அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் கொடுத்த ஊக்கத்தாலும், பெற்றோர் இளவரசன், தேவி ஆகியோரின் ஆதரவாலும், இந்த கருவியை உருவாக்கியுள்ளேன். கண்காட்சியில் எனது கண்டுபிடிப்பை கண்டு வியந்து, சேலம் கலெக்டர் பாராட்டியது மகிழ்ச்சியான தருணம். இவ்வாறு நிறைவு செய்கிறார் மாயாவதி.

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு



1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது? தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா? உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா? இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்? 1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம். 2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம். 3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ். 4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ். 5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள். 6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள். 7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம். 8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ். இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு? காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது? காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்? காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா? அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா? தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா? கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள், தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா? திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்? கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். 1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்). 2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று. 3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.... Courtesy.. Gandharvakottai Shankar ganesh படித்ததில் பிடித்தது நன்றி வழக்கறிஞர் AD muthusamy

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை



அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக்கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பாடத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இதற்கென தனியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை.
பள்ளிகளில் பிற வகுப்பெடுக்கும் தமிழ்வழி கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே ஆங்கில வகுப்பும் எடுத்தனர். கடந்த 2013ம் ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வந்துவிட்டனர். இதுபோல் மற்ற கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகள் வந்துவிட்டனர்.

ஆனால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் மட்டும் இல்லை.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதல் பணிச்சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழி கல்வி வகுப்பறையிலேயே, ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பாடங்களை கற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது,’’ என்றார்.

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்!

பாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி

பாடம் சொல்லும் படிக்கட்டுகள்
தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி
திருநெல்வேலி, நெல்லை அருகே உள்ள அரசு பள்ளி, தனியாரை மிஞ்சு வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அசத்துகிறது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளி, 1940ல், துவங்கப்பட்டது. துவக்க பள்ளியாக இருந்து, காரியாண்டியைச் சேர்ந்த சமூக சேவகரும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினருமான பாண்டுரங்கன் மற்றும் புரவலர்களின் ஒத்துழைப்போடு, 2011ல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்தது.
உயர் நிலை பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்ட, பாண்டுரங்கன், 3.5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார். 240 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் காந்தி மற்றும் ஆசிரியர்கள், ரோட்டரி சங்கத்தின் துணையுடன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, பல்வேறு நவீன வசதிகளை, பள்ளியில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கம்ப்யூட்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், அரித்மெட்டிக் அல்ஜீப்ரா கணிதம், மாணவர்களுக்கு நீதி போதனை, யோகா, கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, ஆறாம் வகுப்புக்கு ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐந்தாண்டுகளாக, 10ம் வகுப்பு மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். படிக்கட்டுகளும் பாடம் சொல்லும் என்பதற்கேற்ப, பள்ளியின் படிக்கட்டுகளில் வாய்ப்பாடு எழுதப்பட்டுள்ளது.
பள்ளி முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளதுடன், வகுப்பறைகளில் ஸ்பீக்கர் பொருத்தப் பட்டு, அறிவிப்புகள் செய்யப் படுகின்றன. பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளும், காய்கறி செடிகளும் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் காய்கறிகளை, சத்துணவுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளியை தரம் உயர்த்தியதை அடுத்து, பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறும் முயற்சியில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதிய பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர்.

மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியை மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு பல்வேறு மாற்றங்களைப் பள்ளி கல்வித் துறை சார்பில் செய்துவருகிறது. 500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 318 அரசுப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

மன உளைச்சலுடன் புலம்பும் தலைமையாசிரியர்கள்

மன உளைச்சலுடன் புலம்பும் தலைமையாசிரியர்கள்

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!

சென்னை : தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்குவதையொட்டி நீட் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு முறையில் நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுவதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் மருத்துவ இடங்களை பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் வரை அரசு நீதிமன்றம் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிவிடும் என்று மாணவர்கள் காத்திருந்தனர். அதோடு நீட் தொடர்பான புரிதல் அதிக அளவில் மாணவர்களுக்கு இல்லாததால் நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடர்பாடுகள் இருந்தன.
கட்டாயமான நீட் தேர்வு தவித்த மாணவர்கள் ஆனால் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டும் விலக்கு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் சிரமங்களை சந்திப்பதால் நீட்இலவச பயிற்சி வகுப்புகளை அரசு அறிவித்தது.
அரசு இலவச பயிற்சி அரசின் இலவச பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 419 மையங்களில், 70 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற்றனர். இந்நிலையில் நீட் இலவச பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
மார்ச் 1ல் பொதுத்தேர்வு பொதுத்தேர்வு எதிரொலி +2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குவதால் நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச வினாவிடை புத்தக விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
கவலையில் மாணவர்கள் கவலையில் மருத்துவ கனவு மாணவர்கள் பொதுத்தேர்வுகள் காரணமாக நீட் இலவச பயிற்சி நிறுத்தப்பட்டிருப்பதாக காரணம் கூறப்பட்டாலும், மருத்துவ கனவுடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் ஒரு வித குழப்பமே ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது, மார்ச் 9க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் மே மாதத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் பேசும் பழங்குடியினக் குழந்தைகள்! - கடலூரைக் கலக்கும் அரசுப் பள்ளி

ஆங்கிலம் பேசும் பழங்குடியினக் குழந்தைகள்! - கடலூரைக் கலக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை சுகன்யா
பழங்குடியின மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்து அசத்திக்கொண்டிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர். ' ஊசி, பாசி விற்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழியாகவே ஆங்கிலத்தைப் படிக்க வைத்தேன்' என நெகிழ்கிறார் ஆசிரியை. 
கடலூர் மாவட்டம், பெண்ணாடம்(மேற்கு) பகுதியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. முழுக்க ஊசி, பாசி விற்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் நிரம்பியுள்ள பகுதி இது. இந்தப் பள்ளிக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியையாக வந்தார் கீதா சதீஷ். தொடக்கத்தில் பல சவால்கள் அவருக்குக் காத்திருந்தன. பல நாடோடிக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதையே விரும்பவில்லை.
அவர்களது பெற்றோருக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, அந்தக் குழந்தைகளை வகுப்பறைக்குள் வரவைத்தார். அடுத்ததாக, ' நகரத்தில் படிக்கும் குழந்தைகளைப் போல, அவர்களும் ஆங்கிலம் கற்க வேண்டும்' என விரும்பினார். ஆனால், அவ்வளவு எளிதாக அது சாத்தியமாகவில்லை. இதன்பின்னர் நடந்த விஷயங்களை நம்மிடம் விளக்கினார் கீதா. 
" மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தொடக்ககால கனவாக இருந்தது. ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண் குறைந்ததால், மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, ஆசிரியர் பணியைத் தேர்வு செய்தேன். மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பது பிரதான கடமையாக இருந்தாலும், அவர்களுடைய மொழி அறிவை வளர்க்க வேண்டியது கட்டாயம் எனக் காலப் போக்கில் உணர்ந்தேன்.
என்னுடைய வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சத்துணவு வாங்கும் வரிசையில் நின்றிருந்தான். உணவுத்தட்டு கூட இல்லாமல் ஒரு தேக்கு மர இலையைப் பறித்து உணவு வாங்கிச் சென்றான். உணவின் சூடு பொறுக்க முடியாமல், அவனது கண்கள் கலங்கியதைக் கவனித்தேன். உடனடியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் வாங்கித் தந்தேன். இங்கு படிக்கும் மாணவர்களில் பலரும் பழங்குடியின மற்றும் நாடோடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். கோவில் திருவிழா காலங்களில் ஊசி, பாசி விற்கவும் சோதிடம் பார்க்கவும் குடும்பத்துடன் சென்றுவிடுவர். அதனால், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருந்தது. 
இந்த விகிதத்தைக் குறைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. 100 சதவிகிதம் வகுப்பறைக்கு வரும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை பரிசு வழங்கி வருகிறேன். இந்தப் பரிசை வாங்குவதற்காக வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நான் நினைத்ததுபோலவே இடைநிற்றல் பெருமளவு குறைந்துவிட்டது. அடுத்ததாக, மாணவர்களிடம், 'பாத்திரமேற்று நடித்தல்' எனும் முறையைச் செயல்படுத்தியுள்ளேன். பாத்திரமேற்று நடிக்கும் போது, எளிதில் பாடங்களை உள்வாங்கிக் கொள்கின்றனர். படிப்பின் மீது அவர்களுக்கு இருந்த பயம், முற்றிலும் அகன்றுவிட்டது.
இதையெல்லாம்விட, ஆங்கிலம் கற்பது அவர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. எத்தனை வகுப்புகள் எடுத்தாலும், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களுடைய மொழியை நான் கற்றுக்கொண்டேன். இப்போது அவர்களுடைய மொழியிலேயே பாடம் நடத்துகிறேன். இந்த முயற்சியால், மாணவர்கள் எளிதாகப் பாடங்களை கற்றுக்கொள்ளவும் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசவும் தொடங்கிவிட்டனர்" என்றார் உற்சாகத்துடன்.
© COPYRIGHT VIKATAN.COM 2017. ALL RIGHTS RESERVED

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள். கல்வி துறையில் வரும் ஜூன் 2018 முதல் DE0, DEEO பதவி மாற்றப்பட்டு நான்கு ஒன்றியத்திற்கு ஒரு DE0 மாவட்டத்திற்கு ஒரு CE0. AEEO பதவிகள் மாற்றம் இல்லை. SSA , RMSA மூடப்படுகிறது . DIET + DE0 அலுவலகம் இணைக்கப்படுகிறது. 1 முதல் 12 வகுப்பு வரை மாவட்டத்தின் அனைத்து அதிகாரமும் CEO கையில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமனம் வரை செய்யும் அதிகாரம் சிஇஓ க்குஅளிக்கப்படும். சிஇஓ க்கள் இடமாறுதல்,17A, 17B மற்றும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. JDமற்றும் இயக்குநர் க்கு மேல்முறையீட்டு அதிகாரி மற்றும்,பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை சரி செய்யும் அதகாரம் வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள் சிஇஓ க்களுக்கு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது | செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித்தேர்வு (டெட்) விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5 முதல் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடக்கும். இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்புகள் வருகிற 25-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 4-ம் தேதியும் காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26430029 என்ற தொலைபேசி எண் மற்றும் 98842-93051 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வில் -தென் மாவட்டங்களின் காலியிடங்கள் மறைப்பு - ஏமாற்றத்துடன் திரும்பினர் ஆசிரியப்பயிற்றுநர்கள்

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வில் -தென் மாவட்டங்களின் காலியிடங்கள் மறைப்பு - ஏமாற்றத்துடன் திரும்பினர் ஆசிரியப்பயிற்றுநர்கள்

இடமலைப்பட்டிப்புதூரில் - நெகிழி இல்லா பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இடமலைப்பட்டிப்புதூரில்

நெகிழி இல்லா பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி... 


 கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஐயா திரு மருத நாயகம் அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளியின் முன்னாள் கல்விக்குழுத்தலைவர் திரு முத்துசெல்வம் அவர்களும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு மணிவண்ணன் அவர்களும் , இடமலைப்பட்டிபுதூர் அரசு காலணி தலைவி திருமதி பத்மாவதி அவர்களும் ,shine Treechy திரு மனோஜ் அவர்களும் மற்றும் திரு குமரப்பன் அவர்களும் முன்னிலை வகித்தனர் . விழாவில் பேசிய ஐயா மருதநாயகம் அவர்கள் “ காட்டு வளம் ஒரு நாட்டின் வளத்தைக்காட்டும் கண்ணாடி” ஒர் நாடு வளம் கொழிக்க வேண்டுமெனில் அந்நாட்டின் மூன்றிலொரு பகுதியில் காடுகள் நிறைந்திருக்க வேண்டும் என்றார் . மேலும் நீர் வளம் பெருகவும் சூழல் பாதுகாப்புக்கும் வனங்கள் மிக முக்கியம் கதைகள் மூலமும் கவிதைகள் மூலமும் கட்டுரைகள் மூலமும் இயற்கையை நேசிக்கும் வல்லுனர்கள் வனங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம். இருக்கின்றனர் .... மாணவ/ மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விதைப்பேனா , விதைப்பென்சில் சிறப்பானது.குழந்தைகளுக்கு மகிழ்வை ஏற்படுத்தும் , மரம் வளர்ப்பதில் ஆர்வத்தை தூண்டும்... என்றார் பள்ளியின் கல்விக்குழுத்தலைவர். பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் விதைப்பேனா
விதைப்பென்சில் வழங்கப்பட்டது ..... நன்றி
சிறுதுளி ஜெயா வெங்கட் மற்றும் பசுமை இந்தியா நாகராஜன்