https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

மூன்றாம் பருவ தேர்வு:அட்டவணை வெளியீடு

மூன்றாம் பருவ தேர்வு
:அட்டவணை வெளியீடு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வுகால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ம்தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.

துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணிவரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம்வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
"கேள்வி எனும் கலை"
சார்ந்த பயிற்சி அட்டவனை

Book Back Question & Answers - TERM 3 All Lessons Completed

Maths Worksheets

பெண்மையை போற்றுவோம்!

பெண்மையை போற்றுவோம்!

“உயிரைகாக்கும் உயரினை சேர்த்திடும் உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்த பெண்மை இனிதடா இனிதடா ............................
நற்குணமுடைய வேந்தை
நயந்து சேவித்தலொன்று 
பொற்புடை மகளிரோடு 

பொருந்தியே வாழ்தலொன்றுபற்பல ரோடு நன்னூல். 
பகிர்ந்துவாசித்த லொன்று
சொற்பெரும் இவைகள் மூன்றும் 
இயற்கையின் சொர்க்கம் தானே ....என்று விவேக சிந்தாமணியில் எது சொர்க்கம் என்பதில் நடுநாயகமாக ,உச்சிதிலகமாக புனிதவதியாக ,மென்மையானவளாக ,மலர்ந்த முகமுடையவளாக ,இன் சொல்லரசியாக புன்சிரிப்பின் பெட்டகமாக ,சுதந்நிரச்சிந்தனை படைப்பாளியாக,உரிமைகளைக்கட்டிக்காத்து தக்க வைக்கும் தாயாக ,
வழிபடும் தெய்வமாக ,வழிகாட்டும் கருவியாக, வலம் வரும் பெண்மையைப்போற்றுவோம்!
“உள்ளே உயிர் வளர்த்து 
உதிரத்தால் பால் கொடுத்து 
அள்ளி இடும் வேளையெல்லாம் 
அன்பையே சேர்த்தனைத்து 
தொல்லை தனக்கென்றும் 
சுகமெல்லாம் நமக்கென்றும் 
சொல்லாமல் சொல்லி இடும் 
தேவதையின்கோவில்அது
தினம் பசித்த முகம் பார்த்து
பழகும் விழி பார்த்து 
பழம்தரும் சோலையது
இருக்கும் பிடிசோறும் 
தனக்கென எண்ணாமல் கொடுக்கின்ற கோவில் அது 
அது தூய்மை நேர்மை வாய்மை அதன்பேர் தாய்மை ... என்ற கவியரசு கண்ணதாசனின் வார்த்தைகளை மெய்யாக்குவோம் .... ஆக பெண் என்பவள் மகளாக மனைவியாக தாயாக தன்னலம் கருதாத தொண்டுள்ளம் கொண்டவளாக சேவகியாக உதவுவதன் மூலம்உயிர்களை வாழ்விக்க முடியும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் ஜீவனாகிய பெண்ணின் சிறப்புகளை உயர்வினைப்போற்றுவோம்! வாழ்த்துவோம்! வணங்குவோம்! வாழ்க பெண்மை ! வளர்க அவள் நல்லறம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போதைய 5 சதவீத அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 7 சதவீதம் ஆகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போதைய 5 சதவீத அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 7 சதவீதம் ஆகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வு 7 சதவீதம் ஆகிறது | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதமாக உயருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது ஜனவரி 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போதைய 5 சதவீத அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 7 சதவீதம் ஆகிறது. விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காகத்தான் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த தகவல் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. இந்த அறிக்கையின்படி, அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் பணியாற்றி வருகிற 48 லட்சத்து 41 ஆயிரம் ஊழியர்களும், அதிகாரிகளும் பலன் அடைவார்கள். இதேபோன்று, இந்த அகவிலைப்படி உயர்வின்மூலம் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்ற 61 லட்சத்து 17 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசின் கஜானாவுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 77 கோடியே 72 லட்சம் செலவு பிடிக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறையின்கீழ் இந்த அகவிலைப்படி உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

முன் அனுமதியின்றி படித்தவர்கள் மீது நடவடிக்கை

RTI - ஆசிரியர்கள் குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு துய்க்கலாம்?

RTI - ஆசிரியர்கள் குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு துய்க்கலாம்?

தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு துய்க்கலாம்?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்


.

144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் இயங்கி வந்த தனியார் மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரத்தை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., ரத்து செய்தது. இதுகுறித்து, மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், '2016 -17 கல்வியாண்டில், தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரியில், இடமளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தனியார் கல்லுாரியைச் சேர்ந்த, 144 மாணவர்களுக்கும் சிறப்பு கவுன்சிலிங், சென்னையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், நேற்று நடந்தது. இதில், அனைத்து மாணவர்களும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து, தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறியதாவது:அரசு மருத்துவ கல்லுாரிகளில், சென்னை, ஸ்டான்லி மற்றும் புதுக்கோட்டை மருத்துவ கல்லுாரிகளை தவிர, பிற மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் இடங்களை அதிகரித்து கொள்ள, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. அதன்படி, 144 மாணவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு

அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கென தனியே சங்கங்கள் அமைத்து செயல்படுகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தேர்தல் வரும்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை, சங்க நிர்வாகிகள் சந்தித்து, கோரிக்கை மனு அளிப்பது வழக்கம். தேர்தல் முடிந்ததும், ஆட்சிக்கு வரும் கட்சியின் தலைவர்களுக்கு, சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடக்கும்.இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு சாதகமாக செயல்படும் ஆசிரியர்களால், அரசு நிர்வாகத்தின் ரகசியங்கள், கட்சி தலைவர்களுக்கு கசிவதாக, அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துஉள்ளன. இதனால், சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.இதன் ஒரு கட்டமாக, 2014 பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்ததாக கூறி, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்டு, கல்வித் துறை அதிகாரிகள், நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு, ராஜ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், தேர்தலில் கட்சி தலைவர்களை சந்தித்த ஆசிரியர்கள் குறித்தும் வெளியான செய்திகளையும், கல்வித் துறையிடம் கடிதமாக கொடுத்து, தன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதா என, கேட்டுள்ளார்.இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட மற்றும் செயல்படும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டியல் வந்ததும், அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். அந்த விளக்கத்திற்கு பின், அவற்றில் விதிமீறல் இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.