https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtwhttps://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

trail

வணக்கம்
நம் தொடக்கக்கல்வி குழு , தற்போது  ourschoolsnews  என்ற புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது...
இதன் நோக்கம் நீங்களும் அதில் பங்குபெற்று ,
 உங்கள் பள்ளி & மற்ற பள்ளிகளின் செயல்பாடுகள் ,
மாணவர்களின் செயல்பாடுகள் ( video , photo ) ,
செய்திகள் , கட்டுரைகள் , புதிய தகவல்கள் , 
உங்கள் அனுபவங்கள் , பயிற்சிதகவல்கள், வழிக்காட்டுதல் ..etc
என தங்களுக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து , மற்றவர்கள் அறிய செய்யலாம்.
*இந்த வலைதளத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும் தங்களுக்கு தரப்படும்.*
விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு whatsapp செய்க. .

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியை மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு பல்வேறு மாற்றங்களைப் பள்ளி கல்வித் துறை சார்பில் செய்துவருகிறது. 500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 318 அரசுப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

மன உளைச்சலுடன் புலம்பும் தலைமையாசிரியர்கள்

மன உளைச்சலுடன் புலம்பும் தலைமையாசிரியர்கள்

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!

தமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!... காரணம் இதுதான்!

சென்னை : தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்குவதையொட்டி நீட் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு முறையில் நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுவதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் மருத்துவ இடங்களை பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் வரை அரசு நீதிமன்றம் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிவிடும் என்று மாணவர்கள் காத்திருந்தனர். அதோடு நீட் தொடர்பான புரிதல் அதிக அளவில் மாணவர்களுக்கு இல்லாததால் நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடர்பாடுகள் இருந்தன.
கட்டாயமான நீட் தேர்வு தவித்த மாணவர்கள் ஆனால் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டும் விலக்கு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் சிரமங்களை சந்திப்பதால் நீட்இலவச பயிற்சி வகுப்புகளை அரசு அறிவித்தது.
அரசு இலவச பயிற்சி அரசின் இலவச பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 419 மையங்களில், 70 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற்றனர். இந்நிலையில் நீட் இலவச பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
மார்ச் 1ல் பொதுத்தேர்வு பொதுத்தேர்வு எதிரொலி +2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குவதால் நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச வினாவிடை புத்தக விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
கவலையில் மாணவர்கள் கவலையில் மருத்துவ கனவு மாணவர்கள் பொதுத்தேர்வுகள் காரணமாக நீட் இலவச பயிற்சி நிறுத்தப்பட்டிருப்பதாக காரணம் கூறப்பட்டாலும், மருத்துவ கனவுடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் ஒரு வித குழப்பமே ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது, மார்ச் 9க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் மே மாதத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் பேசும் பழங்குடியினக் குழந்தைகள்! - கடலூரைக் கலக்கும் அரசுப் பள்ளி

ஆங்கிலம் பேசும் பழங்குடியினக் குழந்தைகள்! - கடலூரைக் கலக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை சுகன்யா
பழங்குடியின மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்து அசத்திக்கொண்டிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர். ' ஊசி, பாசி விற்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழியாகவே ஆங்கிலத்தைப் படிக்க வைத்தேன்' என நெகிழ்கிறார் ஆசிரியை. 
கடலூர் மாவட்டம், பெண்ணாடம்(மேற்கு) பகுதியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. முழுக்க ஊசி, பாசி விற்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் நிரம்பியுள்ள பகுதி இது. இந்தப் பள்ளிக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியையாக வந்தார் கீதா சதீஷ். தொடக்கத்தில் பல சவால்கள் அவருக்குக் காத்திருந்தன. பல நாடோடிக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதையே விரும்பவில்லை.
அவர்களது பெற்றோருக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, அந்தக் குழந்தைகளை வகுப்பறைக்குள் வரவைத்தார். அடுத்ததாக, ' நகரத்தில் படிக்கும் குழந்தைகளைப் போல, அவர்களும் ஆங்கிலம் கற்க வேண்டும்' என விரும்பினார். ஆனால், அவ்வளவு எளிதாக அது சாத்தியமாகவில்லை. இதன்பின்னர் நடந்த விஷயங்களை நம்மிடம் விளக்கினார் கீதா. 
" மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தொடக்ககால கனவாக இருந்தது. ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண் குறைந்ததால், மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, ஆசிரியர் பணியைத் தேர்வு செய்தேன். மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பது பிரதான கடமையாக இருந்தாலும், அவர்களுடைய மொழி அறிவை வளர்க்க வேண்டியது கட்டாயம் எனக் காலப் போக்கில் உணர்ந்தேன்.
என்னுடைய வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சத்துணவு வாங்கும் வரிசையில் நின்றிருந்தான். உணவுத்தட்டு கூட இல்லாமல் ஒரு தேக்கு மர இலையைப் பறித்து உணவு வாங்கிச் சென்றான். உணவின் சூடு பொறுக்க முடியாமல், அவனது கண்கள் கலங்கியதைக் கவனித்தேன். உடனடியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் வாங்கித் தந்தேன். இங்கு படிக்கும் மாணவர்களில் பலரும் பழங்குடியின மற்றும் நாடோடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். கோவில் திருவிழா காலங்களில் ஊசி, பாசி விற்கவும் சோதிடம் பார்க்கவும் குடும்பத்துடன் சென்றுவிடுவர். அதனால், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருந்தது. 
இந்த விகிதத்தைக் குறைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. 100 சதவிகிதம் வகுப்பறைக்கு வரும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை பரிசு வழங்கி வருகிறேன். இந்தப் பரிசை வாங்குவதற்காக வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நான் நினைத்ததுபோலவே இடைநிற்றல் பெருமளவு குறைந்துவிட்டது. அடுத்ததாக, மாணவர்களிடம், 'பாத்திரமேற்று நடித்தல்' எனும் முறையைச் செயல்படுத்தியுள்ளேன். பாத்திரமேற்று நடிக்கும் போது, எளிதில் பாடங்களை உள்வாங்கிக் கொள்கின்றனர். படிப்பின் மீது அவர்களுக்கு இருந்த பயம், முற்றிலும் அகன்றுவிட்டது.
இதையெல்லாம்விட, ஆங்கிலம் கற்பது அவர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. எத்தனை வகுப்புகள் எடுத்தாலும், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களுடைய மொழியை நான் கற்றுக்கொண்டேன். இப்போது அவர்களுடைய மொழியிலேயே பாடம் நடத்துகிறேன். இந்த முயற்சியால், மாணவர்கள் எளிதாகப் பாடங்களை கற்றுக்கொள்ளவும் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசவும் தொடங்கிவிட்டனர்" என்றார் உற்சாகத்துடன்.
© COPYRIGHT VIKATAN.COM 2017. ALL RIGHTS RESERVED

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள். கல்வி துறையில் வரும் ஜூன் 2018 முதல் DE0, DEEO பதவி மாற்றப்பட்டு நான்கு ஒன்றியத்திற்கு ஒரு DE0 மாவட்டத்திற்கு ஒரு CE0. AEEO பதவிகள் மாற்றம் இல்லை. SSA , RMSA மூடப்படுகிறது . DIET + DE0 அலுவலகம் இணைக்கப்படுகிறது. 1 முதல் 12 வகுப்பு வரை மாவட்டத்தின் அனைத்து அதிகாரமும் CEO கையில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமனம் வரை செய்யும் அதிகாரம் சிஇஓ க்குஅளிக்கப்படும். சிஇஓ க்கள் இடமாறுதல்,17A, 17B மற்றும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. JDமற்றும் இயக்குநர் க்கு மேல்முறையீட்டு அதிகாரி மற்றும்,பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை சரி செய்யும் அதகாரம் வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள் சிஇஓ க்களுக்கு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது | செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித்தேர்வு (டெட்) விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5 முதல் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடக்கும். இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்புகள் வருகிற 25-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 4-ம் தேதியும் காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26430029 என்ற தொலைபேசி எண் மற்றும் 98842-93051 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வில் -தென் மாவட்டங்களின் காலியிடங்கள் மறைப்பு - ஏமாற்றத்துடன் திரும்பினர் ஆசிரியப்பயிற்றுநர்கள்

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வில் -தென் மாவட்டங்களின் காலியிடங்கள் மறைப்பு - ஏமாற்றத்துடன் திரும்பினர் ஆசிரியப்பயிற்றுநர்கள்

இடமலைப்பட்டிப்புதூரில் - நெகிழி இல்லா பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இடமலைப்பட்டிப்புதூரில்

நெகிழி இல்லா பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி... 


 கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஐயா திரு மருத நாயகம் அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளியின் முன்னாள் கல்விக்குழுத்தலைவர் திரு முத்துசெல்வம் அவர்களும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு மணிவண்ணன் அவர்களும் , இடமலைப்பட்டிபுதூர் அரசு காலணி தலைவி திருமதி பத்மாவதி அவர்களும் ,shine Treechy திரு மனோஜ் அவர்களும் மற்றும் திரு குமரப்பன் அவர்களும் முன்னிலை வகித்தனர் . விழாவில் பேசிய ஐயா மருதநாயகம் அவர்கள் “ காட்டு வளம் ஒரு நாட்டின் வளத்தைக்காட்டும் கண்ணாடி” ஒர் நாடு வளம் கொழிக்க வேண்டுமெனில் அந்நாட்டின் மூன்றிலொரு பகுதியில் காடுகள் நிறைந்திருக்க வேண்டும் என்றார் . மேலும் நீர் வளம் பெருகவும் சூழல் பாதுகாப்புக்கும் வனங்கள் மிக முக்கியம் கதைகள் மூலமும் கவிதைகள் மூலமும் கட்டுரைகள் மூலமும் இயற்கையை நேசிக்கும் வல்லுனர்கள் வனங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம். இருக்கின்றனர் .... மாணவ/ மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விதைப்பேனா , விதைப்பென்சில் சிறப்பானது.குழந்தைகளுக்கு மகிழ்வை ஏற்படுத்தும் , மரம் வளர்ப்பதில் ஆர்வத்தை தூண்டும்... என்றார் பள்ளியின் கல்விக்குழுத்தலைவர். பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் விதைப்பேனா
விதைப்பென்சில் வழங்கப்பட்டது ..... நன்றி
சிறுதுளி ஜெயா வெங்கட் மற்றும் பசுமை இந்தியா நாகராஜன்


Cuddalore DIS , Kathazhai PUMS jan - 26

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி - கத்தாழை 
 புவனகிரி ஒன்றிய - கடலூர் மாவட்டம்
குடியரசு தின விழா - 2018


சம்மணம் என்றால் என்ன??

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா? *சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*... நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்... இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். *இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*... இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது... *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*. *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*. *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்... கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்... சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்... சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்... *சாப்பிடும் முறை*...! 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க... 2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்... 3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது... 4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்... 5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்... 6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்... 7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்... 8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்... 9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்... 10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்... 11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்... 12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள் 13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்... 14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்... *அமருங்கள் சம்மணமிட்டு*.